பக்கம்:பொன் விலங்கு.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 பொன் விலங்கு

எல்லாவற்றைப் பற்றியுமே சொல்லிக் கொண்டிருப்பதுபோல் பாவித்துக்கொண்டு. நீங்க சொல்றாப்பலே'-என்று நடுநடுவே தழுவிக்கொண்டு பேசுவது ஒருவகைச் சாமர்த்தியம், அந்தச் சாமர்த்தியம்கண்ணாயிரத்திடம் தாராளமாக இருந்தது. அரசியலைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறவரிடம் கண்ணாயிரமும் அதைப் பற்றியே அளந்து விடுவார். சினிமா, நாடகம், சங்கீதம் போன்ற கலைகளைப் பற்றியே பேசுபவர்களிடம் அவைகளைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பவரைப் போல் பேசுவார். கண்ணாயிரம் சாப்பாட்டில் வெஜிடேரியனா, நாண்வெஜிடேரியனா என்று பலருக்கு நிரந்தரமாக ஒரு சந்தேகம் உண்டு. இந்த்ப் பெரிய சந்தேகத்தை மிகவும் சுலபமாகத் தீர்த்து வைக்க முடியும். அவர் வெஜிடேரியன்களுக்கு நடுவில் வெஜிடேரியன். நாண்-வெஜிடேரியன்களுக்கு நடுவில் நாண்-வெஜிடேரியன். இன்னும் அந்தரங்கமாகவும் உண்மையாகவும் சொல்லப் புகுந்தால் மனிதர்களையே கடித்துச் சாப்பிட நினைக்கும் அளவுக்குப் பயங்கரமான நாண்-வெஜிடேரியன் அவர். -

கண்ணாயிரத்தைப் போன்ற மனிதர்களைச் சமூக வாழ்க்கை யிலிருந்தே நீக்கிச் சாய்த்து வீழ்த்திவிட வேண்டுமென்று பலர் நினைக்கலாம். ஆனால், கண்ணாயிரம் நிச்சயமாக வீழ்ச்சி அடைய மாட்டார். ஒரு பக்கமாகச் சாய்ந்துவிட்டால் இன்னொரு பக்கமாக நிமிர்ந்துகொண்டு வாழக்கூடிய வல்லமை அவருக்கு உண்டு. அவர் தஞ்சாவூர்ப் பொம்மையைப் போன்றவர். எந்தப் பக்கம் சாய்த்து விட்டாலும் நிமிர்ந்து நின்றுவிடும் வலிமை உள்ளவரை எத்தனை முறை எப்படி வீழ்த்தினாலும் பயனில்லைதான். அந்த வெட்டவெளியில் நடுச்சாலையில் நடு இரவில் கண்ணாயிரம் நிமிர்ந்து நின்று கொண்டு கார் டிரைவரை வேலை வாங்கியபோது மோகினி இப்படிநினைத்தாள். -

அந்தக் கிராமத்துப் பெண்ணும் அவளுடைய அத்தானும் மோகினியைக் குடிசை வாசலுக்கு வந்து கட்டிலில் உட்காரும்படி பரிவோடு அழைத்தார்கள். 'எவ்வளவு நேரம்தான் இப்பிடி நின்னுகிட்டிருக்கப் போlங்கம்மா? வந்து உட்காருங்களேன். காலாறக் கொஞ்சநேரம் இருந்திட்டுப் பெறவு போகலாம்..." என்று அருகில் வந்து கையைப் பிடித்து, இழுக்காத குறையாய்க் கெஞ்சினாள் அந்தப் பெண். கட்டுக் குலையாத உடம்பும், வெற்றிலைக்காவி ஏறிய இதழ்களும், கோணல் சொருகுக் கொண்டையுமாக அந்தக் கிராமத்துப்பெண் மிகவும் அழகாகத்தர்ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/338&oldid=595516" இலிருந்து மீள்விக்கப்பட்டது