உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 427

கொண்டு வந்து போடட்டுமா?' என்று கண்ணாயிரம் எழுந்து நிற்பதையும் தரையில் நடப்பதையும் பொறுக்க முடியாமல் பரிதாபப்பட்டுப் பயந்து வந்து நெகிழ்ந்துபோய் நாற்காலியைத் தேடிக் கொண்டு வந்து போடுவதற்காகப் பதறி ஓடினார் சத்தியமூர்த்தியின் தந்தை.

"பரவாயில்லை! நீங்கள் உங்கள் வீட்டு மாடியில் மராமத்து வேலை நடப்பதை எனக்குக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தீர்களே, இப்போது மாடிக்குப் போய்ப் பார்க்கலாமா?" என்று பேச்சை வேறு வழிக்கு மாற்றிச் சத்தியமூர்த்தியின் தந்தையையும் அழைத்துக் கொண்டு மாடிக்குப் போனார் கண்ணாயிரம். மாடியில் காரியம் ஒன்றுமில்லையானாலும் ஏதோ பேசுவதற்காகவே அவர்கள் இருவரும் தனியாகப் போகிறார்கள் என்று ஒருவாறு அநுமானிக்க முடிந்தது. அவர்கள் இருவரும் மாடிப்படியேறி மேலே போனதும் குமரப்பன் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி, "என்னடா பெரிய புயல் வீசி ஓய்ந்திருக்கிறாற் போல் தோன்றுகிறதே" என்று சிரித்துக்கொண்டேகேட்டான். ஆனால் அப்போதுசத்தியமூர்த்தியோ தன் நண்பனுடைய கேள்வியைக்கூட காதில் வாங்கிக்கொள்ளாமல் சிந்தனையில் மூழ்கியிருந்தான். அவனுடைய இதயத்தில் மோகினி ஒரு பெரும் வினாவாக எழுந்து நின்றாள்! அவள் மேல் தான் கொண்டிருக்கும் அன்புக்கும் தன் மேல் அவள் கொண்டிருக்கிற பரிசுத்தமான காதலுக்கும் முதல் எதிர்ப்புத் தன் வீட்டிலிருந்தே புறப்பட்டுவிட்டதென்பதை அவனால் மறக்க முடியவில்லை. காவியங்களிலும் இதிகாசங்களிலும் வருகிற காதல் அநுபவங்களைப் போற்றிக் கொண்டாடித் தொழுகின்ற இந்த உலகம் வாழ்க்கையில் கண்ணெதிரே ஒரு பெண்ணிடம் ஓர் ஆண் அதிக அநுதாபம் காண்பிப்பதைக் கூட அருவருப்பாகவும் விரும்பத் தகாததாகவும் நோக்குவதைத்தான் புரிந்து கொள்ள முடிந்தது. சில சமயங்களில் சில அபூர்வமான உன்னத உணர்வுகளும் கற்பனைகளும் மனிதர்களைக் களமாகக் கொண்டு பிறப்பதைப் போலவே அதற்கு எதிரான சில சாதாரண உணர்வுகளையும் மனிதர்களே தங்கள் களத்தில் உண்டாக்கி வளர்க்கிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றியது. பூக்கள் மலர்ந்து மணம்பரப்புகிற இதே மண்ணின் மேல்தான் நிறமும் மணமும் இல்லாத காளான்குடைகளும் பூக்கின்றன என்பதை அருவருப்போடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/429&oldid=595673" இலிருந்து மீள்விக்கப்பட்டது