பக்கம்:பொன் விலங்கு.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 பொன் விலங்கு

"நமக்கேன் ஐயா இந்த வம்பு? பகலில் பக்கம்பார்த்துப் பேசு. இராத்திரி அதுவும் பேசாதே என்று சொல்லியிருக்கிறாற்போல இந்த இடத்திலே இருட்டுக்குக் கூடக் காது கேட்கும். எவனாவது ஜமீன்தாருக்கோ கண்ணாயிரத்துக்கோ வேண்டிய ஆட்கள் கேட்டுக் கொண்டிருந்து போய் சொல்லி விட்டால் தலைக்கே ஆபத்து.'

"வாத்தியாரே, உங்களைப் போன்றவர்கள் இப்படிப் பயந்து பயந்துதான் இந்த உலகத்தைப் பாழாக்கி விட்டீர்கள்' என்றான் சத்தியமூர்த்தி.

'நான் இருக்கிற இருப்புக்குப் பயப்படாமல் வேறென்ன செய்ய முடியும் ஐயா?" என்று கேட்டுவிட்டு வறட்சியாகச் சிரித்தார் பாட்டு வாத்தியார். இந்த வாத்தியாரின் பயத்தைப் போலவே மோகினியின் பயமும் காரணமற்றதாகத்தான் தோன்றியது அவனுக்கு. அவர்களெல்லாம் இப்படிப் பயந்து கொண்டேயிருந்தால் 'மஞ்சள்பட்டி ஜமீன்தார் இன்னும் எட்டுக் கலரில் போஸ்டர் அடித்து ஒட்டி விளம்பரம் பண்ணித் தமக்கு ஏன் பொன் விழாக் கொண்டாடிக் கொள்ள மாட்டார்?' என்று எண்ணி மனம் கொதித்து வருந்தினான் அவன். பாட்டு வாத்தியாரும் அவனும் பாலத்தைவிட்டு இறங்கி வீடு திரும்பும்போது இரவு ஒன்பதரை மணிக்குமேலே ஆகியிருந்தது. மறுநாள் சரசுவதி பூசை அதற்கு அடுத்த நாள் விஜயதசமி. இன்னும் சிறிது நேரத்தில் சென்னையிலிருந்து இன்றிரவு விமானத்தில் பூபதி டில்லிக்குப் புறப்பட்டு விடுவார்' என்பது சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தது. அவர் மதுரையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு தன்னிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தபடி விடுமுறை முடிவதற்கு ஓரிரு தினங்கள் முன்பாகவே மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிப்போய் ஸ்தாபகர் தின விழாவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவன். நாளைக்கும் நாளன்றைக்கும் மதுரையில் இருந்துவிட்டு அடுத்த நாள் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படவேண்டியதுதான் என்றும் தனக்குள் தீர்மானித்துக் கொண்டிருந்தான். அன்றிரவு அவன் நெடுநேரம் கண்விழித்துக் கல்லூரிப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்த வேண்டியிருந்தது.

'நாள் தவறாமல் இப்படிக் கண்விழிக்கிறாயே! உடம்பு என்னத்துக்கு ஆகும்? பொழுதோடு படுத்துக்கொண்டு காலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/468&oldid=595716" இலிருந்து மீள்விக்கப்பட்டது