பக்கம்:பொன் விலங்கு.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 பொன் விலங்கு

விமானத்தின் நேரம் எல்லாவற்றையும் கவனக்குறைவின்றி நன்றாக நினைவுபடுத்திக் கொண்டு சிந்தித்தும் அதே இரவு விமானத்தில் அவர் டில்லிக்குப் போகாமல் தவற விட்டிருக்க முடியும் என்பதற்கு ஒரு நிரூபணமும் கிடைக்கவில்லை. அந்த விமானத்தில் அவர் போகாமல் இருந்திருக்கக் கூடாதா என்று அவன் இதயம் நினைத்து நினைத்துப் பரிதாபப்பட்டது. சிந்திக்கச் சிந்திக்க அந்த விமானத்திலேயே அவர் போய் இருக்கக்கூடும் என்பதற்குத்தான் அதிக நிரூபணங்கள் கிடைத்தனவே தவிர அவர் அதில் போகாமல் தவறவிட்டிருக்கக்கூடும் என்பதற்கு ஒரு நிரூபணமும் கிடைக்கவில்லை. மேலே ஒன்றும் ஓடாமல் பாதிச்சாப்பாட்டிலேயே எழுந்து கைகழுவி விட்டான் அவன். என்ன நடந்திருக்கிறது என்பதை ஒரு சில கேள்விகளின் மூலமே நண்பனால் அப்போது சத்தியமூர்த்தியிடமிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. சத்தியமூர்த்திக்கோ வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வேனையோடு நெஞ்சம் பதறித் துடித்தது. 'மனித வாழ்க்கை எவ்வளவுக்குப் பாதுகாப்பில்லாததாகவும் அபாயங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது?’ என்று எண்ணி எண்ணி நெக்குருகினான் அவன். -

விபத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக மேலமாசி வீதியிலிருந்த பெரிய ஒட்டல் ஒன்றில் நுழைந்து விமானத்துறை அலுவலகத்துக்கும் பத்திரிகை அலுவலகங்களுக்கும் டெலிபோன் செய்து விசாரித்தான் சத்தியமூர்த்தியின் நண்பன். சத்தியமூர்த்தியும் அப்போது உடன் இருந்தான். விபத்துக்கு ஆளானவர்களின் பெயர்ப் பட்டியலில் 'மல்லிகைப் பந்தல் இண்டஸ்ட்ரியலிஸ்ட் பூபதி என்ற பெயரும் இருக்கிறது என்பதைத் தெளிவாகவும் வருத்தத்தோடும் விமானத் துறை அலுவலகத்திலிருந்து அறிவித்தார்கள். மாலைப்பத்திரிகையில் எல்லா விவரங்களும் வெளிவந்துவிடும் என்று பத்திரிகை அலுவலகத்தில் தெரிவித்தார்கள். முந்திய தினம் இரவு இரண்டரை மணி சுமாருக்கு விபத்து நடந்தது என்றும், விடிந்ததும் ஐந்து ஐந்தரை மணிக்குள் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாருக்கும் டெலிபோனில் தகவல் தெரிவித்து விட்டோம் என்றும் விமானத்துறை அலுவலகத்திலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/474&oldid=595723" இலிருந்து மீள்விக்கப்பட்டது