பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் ஆற்றுப்படைவிளக்கம் .7 ஆய்தினை அரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரள் உளர் நரம்பின்.

(அழகிய தினயின் குத்தல் அரிசியைப் போன்ற, குற்றம் நீங்கியதும், விரலால் சுண்டி இழைக்கும் நரம்பை யும் உடைய. -

ஆய்தினை - அழகிய தின. அவையல் - குத்தல் அரிசி, வேய்வை போகிய - குற்றம் நீங்கிய. உளர். சுண்டி இழுக்கும்.)

அந்த நரம்புத் தொடர்ச்சி - இசை முற்றப் பெற்ற நீண்ட கட்டுதலையுடையது.

கேள்வி போகிய கள்விசித் தொடையல். (இசை முற்றுப்பெற்ற நீண்ட கட்டையுடைய தொடர்ச்சியையும். கேள்வி. இசை. போகிய - முற்று பெற்ற. விசி . கட்டுதல். தொடையல் - தொடர்ச் சி.)

திருமணம் செய்யும் மங்கையரை அலங்காரம் செய் தாற் போன்ற மாதங்கி என்னும் தெய்வம் தன்னிடத்திலே பொருந்தி கின்ற அமைதியை உடைய அழகையுடையது மாக உள்ளது. அது. -

மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன அணங்குமெய்க் கின்ற அமைவரு காட்சி. (திருமணத்துக்குரிய தன்மை பொருந்த மங்கையரை அலங்காரம் செய்தாற் போன்ற அழகை உடையதும்,

மணம் - திருமணம். மண்ணிஅன்ன...அலங்காரம் செய்தாற் போன்ற..அமைவரு - யாழிற்குரிய இலக்கணங் கள் யாவும் அமைந்திருக்கிற காட்சி - காண்பதற்கினிய அழகு.)