பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 9

வார்தல் - நர்ம்புகளைச் சேர்த்துத் தழுவி வாசித்தல்.

வடித்தல் - உருவுதல்; நரம்பைச் சுண்டுதல் எனலும் ஆம்.

உந்துதல் - சுண்டுதல். உறழ்தல் - ஒன்றைவிட்டு ஒன் றைச் சுண்டுதல்.)

அப்படி யாழை வாசிக்கும்போது விறலி பாடுகிருள்.

சிறப்புப் பொருந்தியதும் தெய்வங்களைப் பாடும் தேவயாணி

யையும் அதற்குரிய இலக்கணங்களுடன் விரிவர்கப் பாடு கிருள். . . - -

சீருடை நன்மொழி நீரொடு சிதறி.

(சிறப்பையுடைய நல்ல பாடல்களை அவற்றிற்குரிய இயல்போடு பாடி ) - .

சீருடை கன்மொழி என்பது தெய்வங்களைப் பாடும் தேவபாணி என்ற வகைப் பாடலேக் குறித்தது. தேவ பாணி சிறு தேவபாணி, பெருந்தேவபாணி என்று இரு வகைப்படும். இத்தகைய சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டுவிட்டோமே, என்றகினேவினால் அவர்கள் தெய்வங் களைப் பாடுகிருர்கள். ஆறலைகள்வர்களோ அந்தப் பாடல் களின் பொருளை அறியாதவர்களாதலின் இசையைக் கேட்ட அளவில் மயங்கிப் போகிருர்கள். ர்ே. நீர்மை; அதற்குரிய இயல்பு. சிதறி என்ருர் அச்சத்துடன் பாடு வதல்ை விட்டுவிட்டுப் பாடினர் என்பதைக் குறிக்க.

விறலியின் நிலை

இனி அவர்களுடன் வரும் விறலியைப் பற்றிச் சொல் கிறவர்கள், விறலி என்பவள் பாவம் தோன்றப் பாடி ஆடு பவள். விறல் என்பதற்குச் சத்துவம் என்று பழைய உரைகாரர்கள் உரை கூறுவர்; அது பாவத்தைக் குறிப்பது.