பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பௌத்தமும் தமிழும்

தில் இருந்த ஒரு பௌத்தப் பள்ளியில் சிலகாலம் தங்கி யிருந்ததாகத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார். பூதமங்கலம் : இதுவும் சோழநாட்டில் இருந்த பௌத்த ஊர்களில் ஒன்று. இவ்வூரில், பிண்டி தாசர் என்றும், வேணு தாசர் என்றும் பெயருள்ள ஒருவரால் அமைக்கப்பட்ட பௌத்தப் பள்ளி ஒன்றிருந்ததென்றும், அப்பள்ளியில் சில காலம் தங்கியிருந்தபோது ஆசாரியர் புத்ததத்த தேரர் * வினய வினிச்சயம்' என்னும் பாளி மொழி நூலை இயற்றி னார் என்றும் தெரிகின்றது. போதிமங்கை : இதுவும் சோழநாட்டில் இருந்தது. * சாக்கியர் தம் போதிமங்கை ' என்று இதனைப் பெரிய புராணம் கூறுகின்றது. (சாக்கியர் -பௌத்தர்.) இப்பெய ரைக்கொண்டே இது பௌத்தர்களுக்குரியது என்பதை நன்கறியலாம். இவ்வூரில் புத்தகந்தி, சாரிபுததர் முதலான பௌத்த தேரர்கள் இருந்தனர் என்றும், இவர்களுடன் திருஞான சமபந்தர் (கி. பி. ஏழாம நூற்றாண்டு) வாதம் செய்தார் என்றும் பெரிய புராணம் கூறுகின்றது. இப் போதிமங்கையும் மேற்கூறிய பூதமங்கலமும ஒரே ஊராக இருக்கக்கூடும் என்று கருதுவோரும் உண்டு. ஆனால், அவர் கள் அதற்கு ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை. பொன்பற்றி : இதுவும் சோழ நாட்டில் உள்ளது, இது மாலைக் கூற்றததைச் சேர்ந்தது. தஞ்சை ஜில்லாப் புதுக் கோட்டைத் தாலூக்காவில் உள்ளது இந்த ஊா என்றும், தஞ்சை ஜில்லா அறந்தாங்கி தாலூக்காவில் உள்ள - பொன் பேத்தி' என்னும் ஊரே பொனபற்றி என்பது என்றும் கூறுவர். இவ்வூரில் வீரசோழிய ஆசிரியரான புத்தமித் திரனார் வாழ்ந்திருந்தார்.