பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பௌத்தமும் தமிழும் முதல் அதிகாரம். பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோன்றிய பௌத்தமதம், தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் எப்போது வந்தது? இந்த மதத்தை முதல் முதல் இங்குக் கொண்டுவந்தவர் யாவர்? இவற்றைப் பற்றி இங்கு ஆராய்வோம். கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்தான், அதாவது கி. பி. முதலாவது, அல்லது இரண்டாவது நூற்றாண்டுக் குப் பிறகு தான், பௌத்தமதம் தமிழ்நாட்டில் வந்திருக்கக் கூடும் என்று சிலர் கருதுகின்றனர். இவ்வாறு இவர்கள் கருதுவதற்குக் காரணம் யாதெனில், கடைச்சங்க நூல்களில் பௌத்தமதத்தைப்பற்றிக் கூறப்படாதது தான். ஆனால், இவர்கள் கருத்து தவறெனத் தெரிகின்றது. பௌத்த மதத்தைப்பற்றிய குறிப்புகள் கடைச்சங்கத் தொகை நூல் களுட் காணப்படவில்லையாயினும், அச்சங்க காலத்து நூல் களில் காணப்படுகின்றன. அதாவது, கடைச்சங்க காலத்து தூல்களாகிய மணிமேகலை சிலப்பதிகாரங்களில் இந்த மதத் தைப்பற்றிக் கூறப்பட்டுள்ளன. அன்றியும், பௌத்த மதப் புலவர்கள் இயற்றிய செய்யுள்கள் கடைச்சங்கத் தொகை நூல்களுட் காணப்படுகின்றன. மணிமேகலை என் னும் பௌத்த காவியத்தை இயற்றிய பௌத்தராகிய கூல கூறப்பட்டு லப்பதிகாரங்களங்க காலத்து