பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றிலும் பலவீனமடைந்து போகவில்லை பெரும்பாலும் அவர்களிடத்திலேயே எல்லாபலங்களும் சக்திகலும் அமைந்திருக்கின்றன. அங்கெல்லாம் ‘சோஷலிஸ்ட் கூட்டுறவு வாழ்க்கைக் கட்சி ருஷ்யாவிலுள்ள சக்தியும் பராக்கிரமும் பெற்றுவிடவில்லை. அங்ஙனம் பெறுவதற்குப் பலவருஷங்கள் செல்லும் என்றே தோன்றுகிறது. தவிரவும் அங்ஙனம் சோஷலிஸ்ட் கட்சியார் பலமடைந்த போதிலும் அந்த பலத்தை உபயோகிப்பது நியாயமில்லை என்று நான் சொல்லுகிறேன். ஏனென்றால் பிறர் உடமையைத் தாம் அபகரித்து வாழ வேண்டும் என்கின்ற கெட்ட எண்ண முடியவர்களும் ஸர்வ ஜனங்களும் ஸமான செளகர்யங்களுடன் வாழவேண்டும் என்கிற கருத்து இல்லாதபாவிகளும் தம்முடைய கொள்கை விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு வாள் பீரங்கி துப்பாக்கிகளால் அநேகரைக் கொலை செய்து ஊர்களையும் வீடுகளையும் கொளுத்தியும் அநியாயங்கள் செய்வது நமக்கு அர்த்தமாகக் கூடிய விஷயம் அங்ஙனமின்றி எல்லா மனிதரும் உடன் பிறந்த சகோதரரைப் போல் ஆவார்கள் என்றும் ஆதலால் எல்லாரையும் ஸ்மமாகவும் அன்புடனும் நடத்த வேண்டும் என்றும் கருதுகிற தர்மிஷ்டர்கள் தம்முடைய கருணாதர்மத்தை நிலை நிறுத்த கொலை முதலிய மகாபாதகங்கள் செய்வது நமக்குச்சிறிதேனும் அர்த்தமாகக் கூடாத விஷயம்.

கொலையாலும் கொள்ளையாலும் அன்மையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத்தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன். ‘இதற்கு நாம் என்ன செய்வோம் கொலையாளிகளை அழிக்க கொலையைத்தானே கைக் கொள்ளும்படி நேருகிறது. அநியாயம் செய்வோரை அநியாயத்தாலே தான் அடக்கும்படி நேரிடுகிறது. என்று ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. - *

கொலை கொலையை வளர்க்குமே யொழிய அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமே யொழிய குற்ைக்காது. பாபத்தை புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும். பாபத்தை பாபத்தாலே வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை, அதர்மத்தைத்தரமத்தால் வெல்ல வேண்டும். தீமையை நன்மையாலேதான் வெல்ல முடியும். கொலையையும் கொள்ளையையும் அன்பினாலும் ஈகையாலும் தான் மாற்ற முடியும். இது தான் கடைசிவரை கைகூடிவரக் கூடிய மருந்து மற்றது போலிமருந்து சிறிது காலத்திற்கு நோயை அடக்கிவைக்கும் பிறகு அந்நோய் முன்னைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிக வலிமையுடையதாய் ஓங்கிவிடும். ஒரு கொலையாளிக்கூட்டம் இன்று தன்னிடமுள்ள சேனாபலத்தாலும் ஆயுதபலத்தாலும் மற்றொரு கொலையாளிக் கூட்டத்தை அடக்கி விடக் கூடும். இதனாலே தோற்ற கூட்டம் நாளைக்கு பலம் அதிகப்பட்டு முந்திய கூட்டத்தை வென்றுவிடும். பிறகு இதைப் பழிவாங்க

206