பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மக்கள்குழு ஒப்பந்தம் இன்னா தென்றலும் இலமே........ பெரியோரை வியத்தலும் இலமே - சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ” என்பதும் புறநானூற்றுப் (192) பாடலே. இந்தக் காலத்தில் பேசப்பட்டு வரும் ஒரே உலகக் கொள்கை,- உலக ஒருமைப் பாட்டுக்கொள்கை, யாதும் ஊரே யாவரும் கேளிா' என்னும் புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனாரால் பேசப்பட்டிருப்பது பெரு வியப்பும் பெரு மகிழ்ச்சியும் அளிக்கின்ற தன்றோ? மற்றும், இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. - பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். - அறிவினான் ஆகுவ துண்டோ பிறதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை. ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. முதலிய குறட்பாக்கள், பழந்தமிழர் பண்பாட்டின் “எவ ரெஸ்ட்' கொடுமுடியாம் உயர் எல்லையைக் காட்டுவன வாகும். இவ்வாறாகப் பரந்து பட்ட பழந்தமிழ் நூல்களுட் சென்று பார்ப்போமாயின், பார்க்குமிடம் எல்லாம், பழந் தமிழர் பண்பாட்டைப் பரக்கக் காணலாம்! - பண்பாட்டுத் தொடர்ச்சி பண்பாடு பழந்தமிழர்களோடு பழந்தமிழ் நூல்களோடு நின்றுவிட்டால் போதுமா? அது தொடர்ந்து பின்பற்றப்