பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மக்கள்குழு ஒப்பந்தம் ‘அகவல் மகளே அகவல் மகளே. மனவுக் கோப்புன்ன நன்னெடுங் கூந்தல் அகவல் மகளே பாடுக.பாட்டே இன்னும் பாடுக பாட்டே அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே' (23) என்னும் பாடலால் அறியலாம். இதுகாறுங் கூறியவற்றால், அகவலுக்கும் பாடுதலுக்கும் உள்ள தொடர்பு தெரிய வரும்; வரவே இந்த அகவல் நூலும் ஓர் இசைத்தமிழ் நூல் என்பது தெளிவாகும். . அடுத்து, வியாழம் என்னும் முற்பகுதிக்கு வருவோம்: செவ்வூர்ச்சிற்றம்பலக் கவிராயர் வீட்டு ஒலைச் சுவடியில், அகவல் என்னும் இறுதிப்பகுதி இன்றி, வியாழ மாலை” என்னும் முற்பகுதி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வழக்கில், பெயர்களின் பிற்பகுதிகளை விட்டுவிட்டு முற்பகுதிகளை மட்டும் சுருக்கமாகச் சொல் லும் மரபு உண்டு என்பதை அனைவரும் அறிவர். இந்த வியாழம் என்னும் பெயர் இசையோடு நெருங்கிய தொடர்பு உடையது. குறிஞ்சிப் புண் வகையில் 'வியாழம் என ஒரு பண் உண்டு. இதனைத் திவாகர நிகண்டு ஒலி பற்றிய பெயர்த் தொகுதியில் உள்ள, “ சாவகக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, அந்தாளிக் குறிஞ்சி, ஆகுங் குறிஞ்சிக்கு அடுத்தபுல் பெயரே' (146) என்னும் நூற்பாவால் அறியலாம். மற்றும், கு நிஞ்சி யாழில் வியாழக் குறிஞ்சி யாழ் என ஒரு யாழ் உண்டு என்பதை, பிங்கல நிகண்டின் அதுபோக வகை,என்னும் பகுதியிலுள்ள ' -...... ......... ....... வியாழக் குறிஞ்சி. பஞ்சமம், தக்கணாதி, சாவகக் குறிஞ்சி,