உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 23 இந்திரன் ஊரன் பைந்தார் மகிழ்நன்...... பெருகிய சிறப்பின் பேரூர் மூதூர் யாறு மனைக்கிணறு இலஞ்சி...... வருபுன லாடல் மருதக் கருப்பொருளே’ என்னும் நூற்பாவும், மற்றும் பல்வேறு இலக்கிய ஆட்சி களும் மேலும் உறுதி செய்யும். ஆறும் ஊரும் கொண்டுள்ள நெருங்கிய தொடர்பைக் கண்டறியவே இவ்வளவு வழி கடந்துவர வேண்டியிருந்தது. நாம் மேற்கொண்ட இந்தச் சிறிய ஆராய்ச்சியிலிருந்து, பழங்கால மக்கள் ஆற்றங்கரைப் பகுதியையே மிகவும் நாடினர் என்பதும், ஆற்றங்கரைக் குடியிருப்புகளே ஊர்கள் என அழைக்கப்பட்டன என்பதும், நாளடைவில் ஒரு நிலத்துக் குடியிருப்பைக் குறிக்கும் பெயர்கள் மற்ற நிலத்துக் குடியிருப்புகளையும் மாறிக் குறிக்கலாயின என்பதும் தெள்ளிதின் விளங்கும். மற்றும் இவ்வாராய்ச்சியி லிருந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத குறிப்பாவது. ஆற்றங்கரை ஊர்களே வாழ்க்கைக்கு வசதியான உறையுள் களாகும் என்னும் கருத்து. இதனை, திவாகர நிகண்டில் உளள, -

  • ' பூக்கம், கொடிக்காடு, பூரியம், உறையுள், பாக்கம், அருப்பம், அகலுள், பதியே, கோட்டம், வசதி, தாவளம், நியமம் வாழ்க்கை, தண்ணடை, மருதநிலத்து ஊர்ப்பெயர்”

என்னும் நூற்பா தெளிவாகத் தெரிவிக்கிறது. ஆற்றங்கரை வயல் வளம் மிக்க மருதநிலத்துக் குடியிருப்புக்களைக் t அகப்பொருள் விளக்கம் . அகத்திணையியல் - நூற்பா : 23. * சேந்தன் திவாகரம் - இடப்பெயர்த் தொகுதி-99.