பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 31 ' தேவரும் மறையும் இன்னமுங் காணாச் செஞ்சடைக் கடவுளைப் பாடி யாவரும் மதித்தோர் மூவரில் இருவர் பிறந்தநாடு இந்தநன் னாடு'. என நாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்துள்ள பெருமையைக் குறிப்பிட்டுப் புகழ்ந்துள்ளார். சுந்தரர் பிறந்ததால் திருமுனைப்பாடி நாடு நாடுகளுக்குள் சிறந்ததென்றால், அந்நாட்டினுள் அவர் பிறந்த திருநாவலூர் ஊர்களுக்குள் உயர்ந்தது என்னும் உண்மை சொல்லாமலே விளங்குமே. சுந்தரரை ஈன்றளித்ததின் வாயிலாக நாவலூர் நாட்டிற்கே பெருமை தேடித் தந்துள்ளதே! தலைநகர்த் தகுதி ! பெரியோர்களைப் பெற்றெடுத்த பெருமையுடன் தலைநகர்த் தகுதியும் திருநாவலூர்க்கு இருந்தது. நாடு களுக்குள் சிறந்தது திருமுனைப்பாடி நாடு என ஆன்றோர் கள் அறிவித்துள்ளதை முன்னர்க் கண்டோம். அந்தத் திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராகத் திருநாவலூர் ஒரு காலத்தில் திகழ்ந்தது. கி.பி. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டளவில், 'முனையதரையர்' என்னும் அரச மரபைச் சார்ந்த நரசிங்கமுனையரையர் என்னும் மன்னர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்டதாகவும் அவர் சுந்தர ரைத் தத்து எடுத்து வளர்த்ததாகவும் சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவித்துள்ளார். "தேடாத பெருவளத்தில் சிறந்ததிரு முனைப்பாடி நாடாளும் காவலனார் நரசிங்க முனையரையர்'

  • பெரியபுராணம் - நரசிங்கமுனையரையர் - 1.