பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 45 மூட நம்பிக்கைகள் : மூட நம்பிக்கைகளைப் பொறுத்த வரையிலும் நாட்டுப் புறத்திற்கும் நகர்ப்புறத்திற்கும் வேற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. இரு வகையினரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தாமே! வேற்றுமை கூறவேண்டுமெனில், நகர்ப் புறத்தினும் நாட்டுப்புறத்தில் மூடநம்பிக்கை உடையவர் களின் விழுக்காடு கூடுதலாயிருக்கும்.அவ்வளவே அல்லது, இவர்களிடம் இல்லாத மூடநம்பிக்கைகள் சில அவர்களிட மும், அவர்களிடம் இல்லாத மூடநம்பிக்கைகள் சில இவர் களிடமும் இருக்கலாம். மற்ற ஊர்களினும், சென்னை நகரில் சில வகை மூடநம்பிக்கை உடையவர்களின் எண்ணிக்கை மிகுதி. கல்வியறிவாலும் அறிவியல் வளர்ச்சியாலும் அயல் நாடுகளின் தொடர்பாலும் இப்போது மூடநம்பிக்கைகள் குறைந்து வருகின்றன. கிராமங்களிலும் கற்றோர் பெருகு வதாலும் நகரத் தொடர்பினாலும் சில மூடநம்பிக்கைகள் குறைந்து வருகின்றன. கணவன் பெயர், மாமனார். மாமியார் பெயர்கள், கொழுந்தனார்-மூத்தார் பெயர்கள். இன்னும் சிலரின் பெயர்களையும் சொல்லாத கிராமத்துப் பெண்டிருள் சிலரும் இக்காலத்தில் சொல்லத் தயங்குவ தில்லை. பழநி, மதுரை, சிதம்பரம், விருத்தாசலம், திருப்பதி, அண்ணாமலை போன்ற பெயர்களை உடைய ஆடவர் களின் மனைவியர், இந்த ஊர்கட்குப் பயணச்சீட்டு (டிக்கட்) வாங்குவதில் பட்ட இடர்ப்பர்டும் சீட்டு விற்பவரின் திணp லும் இப்போது பழங்கதையாகி வருகின்றன. முருகையன், முருகேசன், முருகசாமி, முருகவேள் என்னும் பெயர்களை உடைய ஆடவருள் சிலரின் மனைவியர், முருங்கை என்ப தின் தொடக்கத்தில் 'முரு' என்பது இருப்பதால், முருங்கைக் கீரையை மரத்துக்கீரை என்றே சொல்வதுண்டு. சட்ட நாதன், சட்டையா என்னும் பெயரினரின் மனைவியர்,