பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மக்கள்குழு ஒப்பந்தம் துரைக்கவில்லை. வால்மீகி முனிவர் காட்டில் வாழ்ந்ததால் இயற்கைக் காட்சிகளைத் திறம்படப் புனைந்துரைத் துள்ளார். கம்பருக்கு அந்த வாய்ப்பு இல்லாததால், வால்மீகி அளவுக்குக் கம்பரால் இயற்கைக் காட்சிகளைப் புனைந்துரைக்க முடியவில்லை-என்பதாக ஒரு கருத்துக் கூறினார். அடுத்த பேச்சு என்னுடையது. அவர் முடித்தவுடன், யான் எழுந்து பேசியபோது அவர் கூறிய அந்தக் கருத்துத் தொடர்பாகப் பின்வருமாறு ஒரு கருத்துத் தெரிவித்தேன். காட்டில் வாழ்ந்தால்தான் இயற்கைக் ாகட்சிகளைப் புனைந்துரைக்க முடியும் என்பதில்லை. தேவையில்லாமல் அளவு மீறி இயற்கைக் காட்சிகளைப் புனைந்துரைக்க வேண்டியதில்லை. தேவை ஏற்பட்டிருப்பின், கம்பராலும் மிகுதியாக இயற்கைக் காட்சிகளைப் புனைந்துரைக்க முடிந்திருக்கும் - என்று யான் கூறினேன். என் கருத்துக்குக் கைகொடுத்தது பாவேந்தரின் பாடல் ஒன்று ஆகும். அப் பாடலின் விளக்கம் வருமாறு :- - முழு வெண்ணிலா ஒளி வீசும் ஒரு பருவநாள் (பெளர்ணமி)-இரவு நேரம்-ஒரு வெட்டவெளி. அங்கே ஒரு காதல் இணை (ஜோடி) - அதாவது - காதலனும் காதலியும் கைகோத்துக் கொண்டு பேசி மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருந்தனர். அந்தக் காட்சியைக் கவிஞர் கண்டு விட்டார். காதலியினும் காதலன் சிறிது தான் உயரமாக இருக்கிறான். இன்ப மயக்கத்திலே காதலியின் கூந்தல் சரிந்து கிடக்கிறது. இருவரும் மகிழ்ந்து பேசி நகைக்கும் போது பெண்ணாதலின் காதலியின் சிரிப்பு ஒலி சிறிதாக இருந்தது; ஆண் ஆதலின் காதலன் கல கல என்று உரக்கச் சிரித்தான். இந்தக் காட்சியைக் கண்ட பாவேந்தர், இதைப் பின்வரும் பாடலாக வடித்துத் தந்துள்ளார் ;