பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மக்கள்குழு ஒப்பந்தம் செருகிக் கொண்டிருக்கும் நிலை. இதுதான் கை கோத்துக் கொள்ளுதல் என்பது. இரண்டின் மட்டைகளும் தனித் தனியாகப் பிரிக்க முடியாத நிலையில் இருப்பதுதான், மட்டைக் கரங்கள் பிணைத்தலாகும். இன்ப வார்த்தைகள் பேசுதல் என்பது, காற்றினால் இரண்டு மரங்களும் உரசிக் கொள்வதால் ஏற்படும் ஒலியாகும். காதலி பெண்ணாதலின் அவளது சிரிப்பொலி பெரிதா .யில்லை -காதலன் ஆடவனாதலின் அவனது சிரிப்பொலி பெரிதாயிருந்தது என்பதாவது: ஒலை காய்ந்த பனை மட்டைகள் காற்றினால் சல சல' என்று பேரொலி எழுப்புவதாகும். பனங்காட்டு நரிசலசலப்புக்கு அஞ்சாது' என்னும் பழமொழி ஈண்டு எண்ணத் தக்கது. சிரிப்பு மிகுதியாய்விட்டால் அடக்க முடியாமல் கட்டுமீறிச் சிரித்து விடுவது மாந்தரது பழக்கம். பனைக்குக் கட்டுக்கு அடங்கா நகைப்பு என்பது, பனை மட்டைகள் ஓயாது சலசலத்துக் கொண்டிருப்பதாகும். சல சலப்பொலி, 'கல கல’ என்று சிரித்தார் என்பதில் குறிப்பிடப்படும் ஒலி போன்றதாகும். 'கல கல' என்று கொட்டிற்று என்பது, ஒருவர் அளவுமீறிப் பேரொலியுடன் தொடர்ந்து சிரிப்பின், இன்னொருவர் அவரைப் பார்த்து, 'போதும் சிரித்தது - நிரம்பக் கொட்டி விடாதே.பல் கொட்டிவிடப் போகிறது - என்று கூறும் உலகியல் போன்றது. மேலும், கொட்டுதல் என்பது மிகுதியைக் குறிப்பதற்கு இன்னொரு சான்றும் வருமாறு: தண்ணீரைச் சிந்தினார்.தண்ணீரைத் தெளித்தார்-என்பன சிறிதளவு தண்ணீரையே குறிக் கும். தண்ணீரைக் கொட்டினார் என்பதோ, தண்ணீரின் மிகுதியைக் குறிக்கும். ஏன் - கலத்திலுள்ள தண்ணீர் முழுவதையுமே கூடக் குறிக்கும். இவ்வளவு சொல் நயங்களும் பொருள் நயங்