உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதன கல்யாணி-1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 மதன கல்யாணி

“நீங்கோ இப்போ பேச முடியாதுன்னு சொன்னாக்கா, தம் பேரு அம்பட்டக் கருப்பாயி இன்னு சொல்லச் சொன்னா” என்று தணிவான குரலில் கூறினாள்.

அந்தப் பெயரைக் கேட்டவுடனே கல்யாணியம்மாள் பெரிதும் திகைப்பும், வியப்பும், திகிலும் அடைந்தவளாய், “யார் அது? அம்பட்டக் கருப்பாயா? அவள் எங்கே வந்தாள் இந்தச் சமயத்தில்?” என்று கேட்டாள். தனது படத்தை விரித்துச் சீறும் நாகப்பாம்பு மந்திரவாதியின் மந்திரக் கோலைக் கண்டு படத்தைச் சுருக்கிக் கொண்டு கீழே விழுந்து ஒடுங்கிப் போவது போல, அம்பட்டக் கருப்பாயி என்ற பெயரைக் கேட்டவுடனே கல்யாணியம்மாளது கோபம் முழுதும் பறந்தது. ஆனால் அந்தப் பெயரைக் கேட்டு தான் அஞ்சுவதாகத் தனது புத்திரிகளுக்கெதிரில் காட்டிக் கொள்ளக் கூடாதென்ற எண்ணம் கொண்டவளாய் பொன்னம்மாளை நோக்கி, “சரி, அந்த அம்பட்ட நாயை இங்கே அழைத்து வா; அவளுடைய குறும்புக்குத் தக்கபடி நன்றாக தண்டித்து அனுப்புகிறேன்” என்று கூறிவிட்டு, தனது புதல்வியர் இருந்த பக்கம் திரும்பி “குழந்தாய் கோமளவல்லி நீயும் அக்காளு மாக முன்னால் போய் இலை போடச் சொல்லுங்கள்; நான் இதோ ஒரே நிமிஷத்தில் வந்து விடுகிறேன்” என்று மிகவும் அன்பாகவும் அழுத்தமாகவும் கூறினாள்.

அதைக் கேட்ட கோமளவல்லி தனது கையில் துரைஸானி யம்மாளை மெதுவாகத் தொட்டு, “நாம் போவோம்” என்று கூற, அவள் நடக்க ஆரம்பித்தாள். அப்போது பொன்னம்மாள் அவ்விடத்தை விட்டு வெளியில் நடக்க, புதல்வியர் இருவரும் தான் உத்தரவின்படி போஜன மாளிகைக்குப் போகும் நோக்கத் தோடு வெளியில் சென்றனர். அவ்வாறு வெளியிற் சென்ற இரண்டு இள நங்கையரும் இரண்டொரு விடுதிகளைக் கடந்து சென்றனர். அதுகாறும் வாய் பேசா ஊமை போலவும் ஆழ்ந்து யோசனை செய்பவள் போலவும் நடந்த துரைஸானியம்மாள் தனது தங்கையை நோக்கி, “கோமளவல்லி பதில் பேசாமல் என்னோடு கூடவே வா ஏன் ஏன் என்று கேட்காதே; இப்போது அம்மாளுடைய சயன மாளிகையில் ஏதோ ஒரு பெருத்த ரகசியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/234&oldid=649697" இலிருந்து மீள்விக்கப்பட்டது