உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதன கல்யாணி-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 49

வேண்டிய சடங்குகளைத் தொடங்கினார்கள். அதுகாறும் சின்னதுரையின் முகத்தையே காணாதவளான கல்யாணியம்மாள், யாரோ அன்னிய மனிதன் உத்தரகிரியைகளைச் செய்ய ஆரம்பித்ததை உணர்ந்து, அந்த மனிதன் யாவனென வினவினாள். அந்த சமஸ்தானத்திற்கு அடுத்த உரிமைக்காரனான சின்னதுரை அவனே என்று அருகில் இருந்தோர் கூற, அதைக் கேட்ட கல்யாணியம்மாளுக்கு ரெளத்திராகாரமான கோபம் பொங்கி எழுந்தது; “ஆகா: இந்தக் கொலைகாரனை உள்ளே யார் விட்டவர்கள்? பெரியவருடைய குழந்தை தங்கம் போல இருக்கையில் வேறு எவனுக்குப் பாத்தியதை இருக்கிறது? காணாமற் போன குழந்தை உயிரோடு அகப்பட்டுவிட்டது. அதைத் தாதி வைத்துக் கொண்டிருக்கிறாள். இந்த மனிதன் முகத்தில் விழிக்க எனக்கு மனம் கூசுகிறது. இவனைப் போகச் சொல்லுங்கள்” என்று கண்டித்துக் கூறிவிட்டு, குழந்தையை வேறோர் அறையில் வைத்துக் கொண்டிருந்த தாதியை அழைக்க, அவள் மூன்று வயதடைந்த ஒரு குழந்தையோடு வந்து சேர்ந்தாள். அதைக் கண்ட ஜனங்கள் எல்லோரும் கடைகடந்த வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்து குழந்தையை மாறி மாறி எடுத்து முத்த மிட்டுக் கொஞ்சினார்கள். சரியான போஷணை இல்லாமையால், அது கருத்தும் இளைத்தும் தோன்றுகிறதென்று தாதி சமாதானம் கூறினாள். எல்லோரும் அதை ஆமோதித்தனர். வேறு சிலர், அதன் மார்பில் இருந்த மாங்காய் வடு மச்சத்தை ஆராய்ந்து பார்த்தனர். மச்சம் அப்படியே காணப்பட்டது. யாவரும் திருப்தி அடைந்தனர். அந்த விபரீதமான செய்தியைக் கேட்ட சின்னதுரை அவமானத் தினாலும், திகைப்பினாலும் குன்றிப்போய் வாய்திறந்து பேச மாட்டாமல் மெல்ல அப்பால் நழுவினான்.

அதன் பிறகு குழந்தையே கருமங்களைச் செய்யக் கடமைப் பட்டது. ஆதலின், அதற்குப் பிரதிநிதியாக ஒர் உறவினன் தருப்பம் வாங்கிக் கருமங்களைச் செய்து தகனத்தை நிறைவேற்றினான். கல்யாணி அம்மாள் நிரம்பவும் புத்திசாலி ஆதலால் சமஸ்தானத் தின் தலைமையைத் தானே வகித்துக் கொண்டாள். பெரிய ஜெமீந்தார் இறந்து போவதற்குச் சில நாட்களுக்கு முன்னால் ஒரு மரண சாசனம் எழுதி வைத்திருந்தார். குழந்தையின் மைனர்ப் ம.க.1-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/67&oldid=649967" இலிருந்து மீள்விக்கப்பட்டது