பக்கம்:மனிதர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岱盛 வளர்ந்து கொண்டிருந்த மகிழ்வண்ண நாதனின் கண்களை கவர்ந்தாள். ஆயினும் கருத்திலே நிலையான இடம் பெற்றானில்லை. : ஒரு சமயம் அவளுடைய சிநேகிதி ஒருத்தி சீதையை சீண்டுவதற்காக அத்தான் பொத்தக்கடா, அழகுள்ள பூசணிக்காய்! என்று வாயாடினாள். சீதை சீறினாள். எங்க அத்தான் அப்படி ஒண்னும் வண்டி கொள்ளாதபடி தண்டியும் சதையுமாக இல்லை. அவர் பொத்தக்கடாவு மில்லை, பூசணிக்காயுமில்லை என்று வெடுவெடுத்தாள். ,இப்போ உன் அத்தான் அழகு என்று நீயே மகிழ்ந்து போகிறே; இல்லையாடி சீதை?’ என ஒரு வம்புக்காரி இண்டல் பண்ணினாள். அவ்வேளையில் அவன் தற்செயலாக அங்கு வந்து விடவும், தோழிகள் கைகொட்டிச் சிரித்தார்கள். சீதையின் மூகம் செச்கச் சிவந்து, தணிந்து சிரிப்பு சிரித்தது. சீதைகூட அழகாகத் தானிருக்கிறாள்' என்றது அவன் மனம். வேறொரு மாலை வேளையில், பொன் வெயில் சூழ் திலைக்கு மினுமினுப்பு பூசிக்கொண்டிருந்தபோது, சீதை ஒரு தாம்பாளம் நிறைய அந்தி மந்தாரைப் பூக்களை கொய்து திரும்பி வந்தாள். ஒரு இடத்தில் வெயில் தனது இனிய ஒளியை அவள் மீது பாய்ச்ச வசதி ஏற்பட்டது. மின்னும் தாம்பாளம் நிறையப் பளிச்சிடும் வண்ணப் பூக்கள் ஏந்தி வந்த பாவையும் அழுத்தமான நிறமுடைய பட்டுப் பாவாடையும் தாவணியுமே கட்டியிருந்தாள். அப்பொழுது அவளே அந்தியிலே பூத்தொளிரும் புஷ்பக்கொடி போல் தான் விளங்கினாள் அவன் நோக்கிலே. மகிழ்வு பூத்த் அவள் முகம் வனப்பு மிகுந்த பூச்செண்டாக காட்சி தந்தது. எனினும் சீதையிடம் அவனுக்கு அளவிலா ஆசை ஏற்பட்டு விடவில்லை. : காதல், காதல் என்கிறார்களே அந்த அற்புதம் ஒருவ துக்கு ஒருத்திபேரில் ஏன் திடீரென்று ஏற்பட்டு அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/66&oldid=855600" இலிருந்து மீள்விக்கப்பட்டது