பக்கம்:மனோகரா.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 28

ч :

மனோஹரன் காட்சி-5

கண்ணே, அதைக் கூறவே நானும் சற்று முன்பாக வாயெடுத்தேன். மனோஹரன் இறக்கவில்லை! சத்திய சீலருக்கு நான் முன்பிட்ட கட்டளையை மீட்டுக் கொண்டு மனோஹானைக் கொல்லாதிருக்கும்படி கட்டளையிட்டேன். மனோஹரனிறக்கவில்லை.

இது உண்மைதானா ?

என் சொல்லை உறுதியாய் நம்பு. இன்னும் உண்மை

யைக் கூறுகிற்ேன். நானே மாறு வேடம் பூண்டு' அவ்வுத்தரவையும் எனது கணையாழியையும் எடுத்துச்

சென்று, மனோஹரனும் சத்தியசீலரும் ஒருவரை யொருவர் கொல்லப்போகும் சமயத்தில் தடுத்து, அவ்வுத்தரவையும் அறிகுறியாகக் கணையாழியையுங் கொடுத்தேன். பிறகு நான் மறைந்திருந்து, என்ன நடக்கிறதெனப் பார்த்திருக்க, ராஜப்பிரியனும் அங்கு வந்தான். பி. ற கு மூவருமாக இந் நாட்டைவிட்டு எங்கேயோசெல்லத் தீர்மானித்துப் புறப்பட்டு விட்டார் கள். இதில் தினையளவும் பொய்யில்லை. என் சொல்லை உறுதியாய் நம்பு.

மாமி, நான் அப்பொழுதே சொன்னேனே! பார்த்தீர் களா! என்னிடம் இப்பொழுது இறப்பதில்லையென்று சொல்லி விட்டுத் தவறுவாரா பிராணநாதர் ?

பத்மாவதி, இனியாவது உன்னை நான் நேரிற்காணலா காதா ?

மஹாராஜா, என்னைத் தாம் பலவந்தப்படுத்தலாகாது நான் ஒரே வார்த்தை சொல்லுகிறேன். உம்மை நான் மன்னித்தது உண்மையாயினும், மனோஹரனை என் கண் முன்பாக நான் பார்க்குமளவும், உம்மை நான் நேரிற்காணேன், அவனையழைத்துவந்து என் முன்பாக விடும்; அப்பொழுது உம்மைப் பார்க்கிறேன், இது சத்தியம்!

சரி! அப்படியே, உன்னிஷ்டப்படி! நான் என் மைந்த னுக்குச் செய்த குற்றத்திற்காக இவ்வளவு தண்டனை பொறுக்க வேண்டியதே என்னாலல்லவோ அவன் இந்த நாட்டை விட்டுச் சொல்லும்படி நேரிட்டது? ஆகவே என் கடமையே அவனைத் தேடி இங்கு அழைத்து வர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/137&oldid=613566" இலிருந்து மீள்விக்கப்பட்டது