பக்கம்:மனோகரா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-11 மனோஹரன் 5

வி : (தன் கணவன் கரத்திற் சாய்ந்து பிராணநாதா பிராண்

ரா ;

நாதா (அழுகிறாள்!

விஜயா இப்பொழுது நீ கண்ணிர் விடலாமா? உன் கண வனுக்கு ஒரு குறையும் வராது, சந்தோஷமாய் மங்கள் வார்த்தை கூறியனுப்பு.

பிராணநாதா! உம்மை நான் எப்படி வீட்டுப் பிரிந்திருப்

பேன்? எப்படிப்பட்ட வீரர்களும் மடியும் அமர்ப்பூமியில்

உம்மை நான் மனதொப்பி எப்படியனுப்புவேன்? ராகம் நாதநாமக்கிரியை, தாளம் திரிபு.ை

பல்லவி

ஐஐயோ! எப்படிப் பிரிவேன்

என் பிராண நாதா உமை விட்டு (ஜ)

அனுபல்லவி

வைய மீதி லுமைப் போல

வாக்கை மறுப்பாருளரோ, (ஐத்

சரனம்

நெஞ்சமதிலுமக் கென்மேல்

கொஞ்சமேனு மீரக்கமிலையோ தஞ்சமாயுமை வஞ்சியடைய

அஞ்சலென்றே அறையிரோ. 《岛》

(தலையைத் திருப்பிக்கொண்டு) என்ன கஷ்டம் ஜல தோஷம் பிடித்துக்கொண்டு என்ன தொந்தரவு செய்கிறது:

விஜயா, நீயொன்றும் அஞ்சவேண்டாம். நான் மீண்டு வருமளவும் என் தாயார் உன்னைப் பார்த்துக்கொள் வார்கள்.

பிராணநாதா, தானும் உம்முடன் வருகிறேன்.

ஐயோ. இதென்ன சங்கடம்: ஸ்திரிகள் யுத்த களத்திற்கு வரவாகுமோ? இது அசாத்தியமான காரியம். நீ இங்குத் தானே சுகமாயிரு. நான் போய்த் திரும்பிவருகிறேன் சீக்கிரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/14&oldid=613255" இலிருந்து மீள்விக்கப்பட்டது