பக்கம்:மனோகரா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.

வணை:

థ్రి: 5’

பெள:

ప్రౌఢ; డ్రీ

3] மனோஹரன் 2

பித்து, எப்பொழுதும் தன் பக்கலிலேயே இருக்கும்படி கூறினார். இரவிலும் வேறிடத்தில் உறங்கி ன ல் எனக்கு அசெளக்கியமாக இருக்குமெனக் கூறித் தன் விடுதியிலேயே என்னை உறங்கும்படி கட்டளையிட் டார், இது தெய்வாதீனமெனக் கருதி சந்தோஷத்துடன் நான் உடன்பட்டு, நடுநிசியில் சமயம் பார்த்து அவர் அருகில் வைத்திருந்த உடைவாளை மெல்லென எடுத்துக் கொண்டு புறப்பட்டு வந்து விட்டேன்.

மனோஹரன் உம்மீது சிறிதும் சந்தேகங்கொள்ள

வில்லையா ?

நான் தன் தாயாரிடமிருந்து வந்ததாகக் கூறியது.முதல் என்மீது எள்ளளவும் அவர் சந்தேகங் கொள்ளவில்லை. ராஜப்பிரியன் மாத்திரம் என்னை அடிக்கடி உற்றுப் பார்த்த வண்ணமிருந்தான். அவன் ஏதாவது சந்தேகப் பட்டிருக்கக் கூடும். அப்பொழுதுநான் பூண்டிருந்த வேடத்தைக் கண்டிருப்பிராயின் நீரும் என்னை இன்னா னென அறிந்திருக்கமாட்டீர்.

மிகவும் சந்தோஷம். காலத்தில் நீர் எனக்குச் செய்த இப்பேருதவியை நான் ஒருாைலும் மறவேன்-மனோ ஹரன் எப்பொழுது இங்கு வருவதாக உத்தேசித்திருக் கிறான் தெரியுமா உமக்கு ?

நாளைத்தினம் காலை வருவதாக மஹாராஜாவுக்குச் சேதி வந்திருப்பதாக நானறிந்தேன்,

அப்படியா; ஆனால் நாம் தாமதிக்கலாகாது! மனோ ஹரன் திரும்பி வருமுன் நமதெண்ணத்தை நிறைவேற்றி விடவேண்டும்-பெளத்தாயனரே, நீர் இது வரையில் செய்த உதவி ஒரு பெரிதன் , இனி செய்யப்போகிறதே பேருதவியாம். அதையும் செய்வீரென்பதற்குச் சத் தேகமே இல்லை. இந்த உடைவாளை, ஏதாவது ரத்தத் தைப் பூசி, இட்சணமே பத்மாவதியிடம் எடுத்துச் சென்று மனோஹரன் இறந்ததாகவும், இதை அதற்கு ஒரு குறியாக அவளிடம் அனுப்பியதாகவும் கூறி, எப்படி யாவது பத்மாவதி புத்திர சோகத்தால் தற்கொலை புரியும்படி செய்யவேண்டும். தங்களையொத்த புத்தி மான்களுக்கு பெண் பேதையாகிய நான் சொல்லத்தக்க உபாயம் ஒன்றுமில்லை. சோழதேசம் (լք(էքճմնո5Այլն

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/36&oldid=613319" இலிருந்து மீள்விக்கப்பட்டது