பக்கம்:மனோகரா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|காட்சி:2} மனோஹரன் 57

çô ,

அதோ பாரும் ஆங்காங்குப் பெண்கள் தம் காதலருடின் நீர் நிரம்பிய தடாகங்களிலிறங்கி ஒருவர்மீதொருவர் தண்ணீர் வாரி இறைத்து விளையாடியும், நிலவை வியந்து பூங்கமழ் சோலைகளிலுலாவியும், பூச் செண்டு களால் ஒருவரையொருவர் அடித்தும், பூ மாலைகளால் ஒருவரையொருவர் கட்டியிழுத்தும், மகரந்தத்தைத் தூவியும், மல்லிகை மலர்களைச் சூடியும், ஒருவர்

கிண்ணை ஒருவர் பொத்தியும், இன்னும் இப்படி பற்பல

விதமாகக் காலங்கழிக்கிறார்களே, தென்றலும் சுகந்த முங் மெல்லைெ வீசும் இவ்வழகிய பூஞ்சோலையில்: பிராணநாதா, இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு தனியாயிருக்க என்மனம் ஒப்புமா? வாரும், நாமும் போய் விளையாடுவோம்,

கண்ணே, என் மனம் ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிறது இப்பொழுது வினோதத்தின்மீது செல்லவில்லை.

உம்! உம்! நான் எப்பொழுது அழைத்தாலும் இப்படித் தானே! உம்! உம்!

இதென்னடா பெரிய தொந்தரவாயிருக்கிறது!-என்ன செய்யவேண்டும் என்கிற ய்? நானா விளையாடுவது?

அவர்களெல்லாம் என்ன செய்கிறார்கள்? அவர்கள் விளையாடவில்லையோ ?

அவர்களெல்லாம் மு. மு முண்டங்கள், அவர்களுக்கு வேறொரு வேலையுமில்லை. விஜயா, நான் சொல் வதைக்கேள்

நான் கேட்கமாட்டேன்.

(முகத்தை முந்தானையால் மூடிக் கொள்கிறாள்.)

அடடா தீர்ந்தது!-கண்ணே. அழவேண்டாம், இதோ வந்துவிட்டேன். (கண்ணிரைத் துடைத்து) என்னை வெல்லுவதற்கு இந்தப்பாணம் ஒன்று எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கிறாயே!

அதுதான் சரி! வாருமிப்படி,

(பூமாலையால் அவனைக்கட்டி இழுக் கிறாள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/66&oldid=613406" இலிருந்து மீள்விக்கப்பட்டது