உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மர இனப் 3-2 துடை வாழை: இதனால், துடை வாழை என்னும் ஒரு பெயரை, துடை என்னும் அடை மொழியொடு சாம்பசிவம் பிள்ளை யின் அகர முதலி அறிவித்துள்ளது. ஈண்டு, நல்லாற்றுார்ச் சிவப்பிரகாசரின் நால்வர் நான்மணி மாலை என்னும் நூலில் உள்ள, "துடைவாழை மேல்மடவா ரல்குல்பாம்பு தொடமயங்கி கடைவாய்ப் பினமெனப்பட்டார் பெறுகிலர் கச்சுகுலை யுடைவாழை மேலுரகக் தீண்ட மாய்ந்த ஒருவனுயிர் அடைவான் அருள்புரியும் திருகாவுக் கரசினையே’’ (26) என்னும் பாடல் எண்ணத் தக்கது. வாழை மரத்தில் இருந்த பாம்பு கடித்ததால் மாண்ட அப்பூதியின் மகனை உயிர் பிழைக்கச் செய்த திருநாவுக்கரசரின் திருவருளை, அயல் மாதரின் துடையாகிய வாழை மரத்தின் மேற்பகுதி யில் உள்ள அல்குலாகிய பாம்பு தீண்டக் காம மயக்குற்று நடைப் பிணமாய்த் திரிபவர் பெற முடியாது என்பது பாடல் கருத்து. ஈண்டு, துடை, வாழையாக உருவகிக்கப் பட்டுள்ளது. இந்த அடிப்படையில், துடை வாழை என்னும் பெயர் தரப்பட்டிருக்கலாம். 3-3 தண்டாயுதம்: வாழை மரப் பகுதி (வாழைத்தண்டு) பார்ப்பதற்குத் தண்டாயுதம் (தடி, கதை) போன்று இருப்பதால் இதற்குத் தண்டாயுதம்' என்ற பெயரும் உண்டு. 3-4 யானைக் கொம்பன்: மொந்தன் வாழையின் பூ, யானைக் கொம்பு (தந்தம்) போல நீண்டு தடித்து வன்மையா யிருப்பதால், மொந்தன் ஒர்வைப்புக் கலை 53 ఘ్రాత్రత్త 'யானைக் கொம்பன் வாழை என்னும் பெயர் இப்பட்டுள்ளது. சார்பினால் பெற்ற பெயர்கள்: க1 மங்கல ஒப்பனை: திருமண அரங்குகளில் வாழை மரம் இகலமாகப் பொலிவு தருதலால் இதற்கு மணக்கோலம்' நீrற பெயரும் உண்டு. மற்றும் மங்கலமான இடங்களில் கிய ஒப்பனையாக (அலங்காரமாகத்) திகழ்வதால் ந்தர மண்' என்ற பெயரும் வாழைக்கு உண்டு. சுந்தரப் கட்டப்பட்டு 鷺 § ஒன்றால் அழகு, மண் என்றால் ஒப்பனை (அலங்காரம்). ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பா ஒrலையில் உள்ள மண் கெழு மறவன்' (4-15-கொளு) என்னும் பாடல் பகுதிக்கு, மாகறலூர்க்கிழார் சாமுண்: தவ நாய்கர் என்பவர் எழுதியுள்ள ஒப்பனையாற் போலிந்த மறத் தொழிலையுடைய விரன்' என்னும் இரைப்பகுதி ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது. (மண்=ஒப்பனை) && . 42. ஆண்டி வாழை, மலை வாழைக்கு ஆண்டி வாழை' என்னும் பெயர் இடப்பட்டுள்ளது. ஆண்டிகள் (துறவிகள்) வாழும் மலைப் பகுதியில் இருப்பதால் இப்பெயர் பெற்றது போலும். நீற்றும், பழநியாண்டி (முருகன்) விற்றிருப்பதும் (பழநி) இலை தானே! "சேயோன் மேய மைவரை உலகம்' என்னும் தொல்காப்பியப் பகுதி (தொல்-பொருள்-5) ஈண்டு இணைத்து எண்ணத்தக்கது. 8. பயனால் உற்ற பெயர்கள்: 3:1,2 பித்தமும் வாயுவும்: வாழையால் உண்டாகும் பயன் தொடர்பான பெயர் ஆளுள் இரத்த பித்த நாசனி என்பது ஒன்று. வாழையால்