பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மர இனப் மரங்கட்குள்ளே முருங்கை மரத்தின் இலையே (கீரையே) உணவுக்கு மிகவும் ஏற்றது. மிகுந்த ஆற்றலைத் தருவது. முருங்கைக் காயினும் முருங்கைக் கீரையே மிக்க ஆற்றல் உடையது. முருங்கைக் காயில், புரோட்டின் 2.53, கொழுப்பு 0.1, கார்போஹைடிரேட்டு (மாவு, வெல்லம் முதலிய ஆற்றல் பொருள்) 3.72, தாதுப்பொருள் 1.96, சிறிது ஏ வைட்டமின் ஆகியவை உள்ளன. முருங்கைக் கீரையிலோ, புரோட்டின் 6.65, கொழுப்பு 1.73, கார்போஹைடிரேட்டு (மாவு, வெல்லம் முதலிய ஆற்றல் பொருள்) 13.50, தாதுப்பொருள் 2.2 விழுக்காடு உள்ளன. எனவே, மூலமான-முக்கியமானமுதன்மையான பர்னத்தை-இலையை-கீரையை உடையது மூலபர்னியாகும். முருங்கைக்கு மூலபர்னி என்னும் பெயர் பயனாலும் உடற்கூறாலும் வழங்கப்பட்டது. இரை, வடிவத்தைச் சேர்ந்த்தல்லவா ? 3-1 மூல கப மணம் : 3-11-1 மூல கபம் : மூல கபம் என்னும் பெயர் சா. சி. பி, அகரமுதலியில் தரப்பட்டுள்ளது. முருங்கை என்றால் முருங்கை மரம் என்று கொள்ளல்போல, மூல கபம் என்றால் மூல கப மரம் என்று கொள்ள ல் வேண்டும். வித்த வைத்திய அகராதியில் 'மூல கப மரம் என்றே கூறப்பட்டுள்ளது. பசிப்பிணி மருத்துவன்' என்னும் (173ஆம்) புறப்பாட்டுத் தொடருக்கு. பசிநோய் போக்கும் மருத்துவன் எனவும், பசிப்பிணி: மருந்து' (28-217) என்னும் மணிமேகலைத் தொடருக்கு, போக்கும் மருந்து எனவும் பொருள். மூல கப மரம் என்பதற்கு, ఆక மருந்து மரம் எனப் பொருள் பசி நோயைப் கொள்ளல்போல, கபத்தைப் போக்கும் கொள்ளல் வேண்டும். பெயர்வைப்புக் கலை 123 உடம்பில் வாத பித்த சிலேஷ்மம் என்னும் மூவகை உண்டு. இவற்றைத் தமிழில் வளி, பித்தம், ஐ (ஐயம்) எனக் கூறுவர். இவண், மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று (941) என்னும் குறள் காணத்தக்கது. வடமொழியில் சிலேஷ்மம் (சிலேட்டுமம்), கபம் எனப்படுலது தமிழில் இ, ஐயம் எனப்படும். கபம் அல்லது ஐ என்பது, சளி, கோழை, இருமல், மூச்சிழுப்பு முதலியவை தொடர்பானது. கபம்) ஆகியவற்றிற்கு இலக்கியச் சான்றுகளாவன: . 'ஆதி தன்னிடைப் பெற்ற வரத்தினால் பீதி யின்றிப் பெரும்புவ காங்களை வாத பித்த கபமென வன்றிறல் ஒது மூவரும் ஒத்து கலிங்தனர்' (இராமாயணம்-உத்தர காண்டம்-31-ஒட்டக்கத்தர்). (கருத்து-நான்முகனிடம் வரம் பெற்ற மாலியவான்,' கமாலி, மாலி என்னும் மூவரும், உடம்பை வாதம்பித்தம்-கபம் ஆகியவை வருத்துதல்போல, உலகங்களை வருத்தலாயினர்.) ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போவதுமே அகத்தார் கூடி மையினால் கண்ணெழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன்முன்....' (அப்பர் தேவாரம்-திருக்கன்றாப்பூர்ப் பதிகம்-7) புலனைந்தும் பொதிகலங்கி கெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐம்மேல் உந்தி அலமந்த போதகை அஞ்சேல் என்று அருள் செய்வான் அமருங் கோயில்' (சம்பந்தர் தேவாரம்-திருவையாறு-3-1)