பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

=மறவர் சீமை

முற்றுப்பெறும் தருணம் வந்துவிட்டது.

கமுதிக்கோட்டை வாசலுக்கு கிழக்கே கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை, அந்த வீர மறவர்களது உடல்கள் சிதறிக் கிடந்தன. குரங்கு கையில் பட்ட பூமாலையின் இதழ்கள் போல, தன் மானமும் வீரத் தகைமையும் பொருந்தப்பெற்ற இந்தத் தீரர்கள் தங்களது முந்தையோர் வழிநின்று மண்ணை, மண்ணின் மனத்தை, மானத்தைக் காக்கப் போராடி விழுப்புண்பட்டு வீழ்ந்து மாய்ந்தவர்கள் அணி அணியாக மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த திருமலை நாயக்கர் பெரும்படையை புறமுதுகிட்டு ஓடச் செய்தவர்கள். சொக்கநாத நாயக்கர் ஆட்சியில் வலுச்சண்டைக்கு வந்த வடுகர் சேனையைச் சிதறி ஓடச் செய்தவர்கள், ராணி மங்கம்மாளது தளபதிஅச்சய்யாவின் கடல்போல் ஆர்ப்பளித்து வந்த படைகளைத் துவம்சம் செய்தவர்கள், தஞ்சையில் இருந்த சரபோசி, துல்ஜாஜி மன்னர்கள் தலைமை தாங்கி வந்த படைகளைப் பதம்பார்த்து உயிர்தப்பி ஓடுமாறு விரட்டியத்த அந்த உத்தம மறவர்களது வழித்தோன்றல்கள்தான். இவர்களும். அவர்கள் பற்றிப்பிடித்த வெற்றிக்கொடியை இவர்களால் எட்டிப் பிடிக்க இயலாமல் போய்விட்டதுே

வீரவுணர்வுகள் இவர்களை உந்தி எழச் செய்யவில்லையா? இவர்களது இதயங்களில் இழைந்து நின்ற நாட்டுப்பற்றும் போர்க்குணமும் நலிவுற்றுவிட்டனா? நாடு காக்கப் போராடிய அவர்களது சாதனை தோல்வியுற்றனவே!

முந்தைய வரலாறுகூறும் போர்களுக்கும் தற்பொழுதைய போருக்கும் ஆயுதம், உத்தி ஆகியவைகளில் வேற்றுமை பல. இரும்பு வேலும், வாளும் மட்டும்தான் அன்றைய போர்களில் முடிவுகளை குருதி வெள்ளத்தில் வரைந்தன. ஆனால், இப்பொழுது அக்கினியை மழைபோலச் சொரியும் துப்பாக்கி, பீரங்கிக் குண்டுகளே வெற்றிகளை நிர்ணயித்தன. அதற்கு மேலாக எட்டப்பர்களது கைவரிசை