உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 - = = மறவர் சீமை

உன்னிப்பாக ஈடுபட்டிருந்தார். அவர் எதிர்பார்த்தபடி ஆறுதலான செய்தி எதுவும் கிடைக்கவில்லை. மாறாகக் கும்பெனியாரது அணிகள் கிராமங்களில் செய்து வந்த வெறித்தனம் பற்றிய விபரங்கள் தான் அவருக்குக் கிடைத்தது. அவரது மன வேதனையை மிகுதியாகக் கிளறி விட்டது.

அடுத்த நாள் காலையில் வழிப்போக்கர் உடையில் தெற்கு நோக்கி புறப்பட்டுச் சென்றார். பெருநாழி, பரளாச்சி, தோப்பிலாக்கரை வழியாக அன்று இரவு பள்ளிமடம் கிராமத்தில் உள்ள மடத்திற்கு போய்ச் சேர்ந்தார். கி.பி.10ஆம் நூற்றாண்டில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் ஏற்பட்ட போரில் சோழ இளவரசன் ஒருவன் கொல்லப்பட்டான். அவனது சடலம் அங்கு அடக்கம் செய்யப்பட்ட பள்ளிப்படைக் கோயிலுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அந்தப் பழமையான சிற்றுர் மிகவும் அமைதியுடன் உறங்கிக் கொண்டு இருந்தது. நேரம் தாழ்த்தி முன்சாம நேரத்தில் அங்கு சென்ற மயிலப்பன் சேர்வைக்காரருக்கு குடிப்பதற்கு மட்டும் ஒரு செம்பு குடிநீர் கிடைத்தது. பயணக் களைப்பினால் நன்கு உறங்கி மறுநாள் காலையில் விழித்திருந்த மயிலப்பன் சேர்வைக்காரர் மனத்தில் ஒரு புதிய சிந்தனை தொட்டு நின்றது.

அதுவரை சேதுநாட்டு மன்னரையும், மக்களையும் பற்றியே சிந்தித்து வந்த அவருக்கு இராமநாதபுரம் கோட்டையில் சிறைவைக்கப்பட்டுள்ள தனது மனைவியைப் பற்றிய சிந்தனைதான் -91:5l

ஏற்கனவே திருச்சிக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க சேதுபதி மன்னரைச் சிறையிலிருந்து மீட்டிக்கொண்டு வருவதற்கு முயன்ற பொழுது அவர் கையாண்ட யுத்திகளும் முயற்சிகளும் இப்பொழுது அவருக்கு நினைவுக்கு வந்தது. அதைப் போன்றே இராமநாதபுரம் கோட்டையிலுள்ள தனது மனைவியைக் கும்பெனியாரின் காவலிலிருந்து தந்திரமாகத் தப்ப