பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 48 வன்; மச்சு வீட்டில் வாழ்பவன்; மல் வேட்டி கட்டுகிறவன்; சரிகை வேட்டியும் பட்டுச் சட்டையும் அணிபவன்; மாயத் திருட்டு கடத்து கிறவன்; சம்பாச் சோறு உண்பவன்; ஐட்கா வண்டியில் போகிற வன்; பட்டாக்கத்தி பிடிக்கிறவன்; சிவத்த பெண்ணேக் கட்டிக் கொண்டவன்; வெள்ளிமிஞ்சி போடுகிறவன். கொழுந்து வெற்றிலேதான் அவன் போடுவது, சரியான தேக் குப் பெட்டியில்தான் அவன் பண்டம் வைப்பது; சந்தனக்கட்டிலில் தான் படுப்பான்; செம்பகப்பூவை அணிவான்; சாப்புத் தண்ணிர் குடிப்பான். வாழையிலையிலே உண்டு ஜப்பான் பாயிலே படுத்து வைர மோதிரம் அணிந்து தலைச்சவரம் பண்ணிக்கொண்டு ஊற்று ைேரக் குடிக்கும் ஒய்யார ஆடவன் அவன். வாட் சண்டை போடுவான்; ஜெயில் கூடத்தில் இருப்பான். அவனிடம் கரிக்கொம்புதான் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. போலீஸ் என்ருல் அவ னுக்கு வேடிக்கை. பஞ்சம் பிழைக்க ரங்கூனுக்குப் போன ஒருவன் தான் பட்ட பாட்டையெல்லாம் சொல்லி அழுகிருன். அவன் கதை 32 பாட் டாக அமைந்திருக்கிறது. சேசு பிறந்த காளில் ஆடைகள் பெற்ற தையும், டங்கன்துரை என்பவன் இல்லே என்னுமல் கொடுத்ததை யும் சொல்கிருன், அந்தத் துரை சின்னப் பெண்ணைக் கண்டால் சேட்டை பண்ணுவானம், கங்காணிமாரைக் கையிலே போட்டுக் கொண்டு கண்ட இடமெல்லாம் கண்ட கண்ட பெண் ணைக் கையைப் பிடித்து இழுப்பானும்: பஞ்சம் பிழைக்க ரெங்கோனுக்குப் போயி பட்டேனம்மா பாடெல்லாம் பட்டபாட் டையெல்லாம் விட்டுச்சொன் னேனுண்ணு பகவானுக் கேற்கா தம்மா!' என்று அவன் இரங்குகிருன். - - அதன் பின் வருவது மீளும் பாட்டு. வலைஞர் பாடுகிற பாட்டு இது. இதில் ஒவ்வொரு கண்ணிக்கும் பின், அன்னே நன்னே நானே நன்னே மீளும்போ ஏண்டி அப்படி நானேநன்னே நானேநன்னே இப்போ என்பது பல்லவிபோல் வருகிறது. பல செய்திகள் தொட்ர்பின்றி இப் பாட்டில் வருகின்றன. . . . . . . . . . . 1. ւյ, 163 : 26, 2. լ. 163: 28, 3. ப. 163:29,