பக்கம்:மலைவாழ் மக்கள் பாண்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 பட்ைகளையும் ஆராயின் அவை ஒரு சில எல்லைக்குள்ளேயே அடங்குவதறிந்தேன். எனவே பெரும்பாலான பிரிவுகளை உள்ளடக்கிய பத்துவகை மரபினரைப்பற்றியே இந்நூலில் தொகுத்துக் காட்டியுள்ளேன். இவர்களுள் சிலரைப்பற்றி முன்னரே பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளனர். அவைகளைப்படித்து அந்த அடிப்படையிலே சுற்றிவந்து என் ஆய்வினை அமைக்கலாம் என முதலில் நினைத்தேன். எனி னும் அப்பழங்குடி மக்களே நேரில் கண்டு அவர்தம் வாய் மொழிகளைக் கேட்ட பிறகு அவற்றின் துணையே துணையாகக் கொண்டு, பிறர் நூல்களைத் தொடாது, இந்நூலே எழுதி முடித்தேன். இந்நூலில் நான் அப்பழங்குடி மக்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் எழுதிவிட்டேன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. அவர்தம் மரபும் பண்பும் வாழ்வும் வளமும் பிற நல்லியல்புகளும் பழமைக்கும் பழமை யாய்ச் சென்று கொண்டிருக்கின்றன. அரசாங்கம், பொறுப் பும் பற்றுமுள்ள நல்ல அதிகாரிகள் வழி, தக்க வகையில் இத்துறையில் கருத்திருத்தின் கண்டறியாதன காணும்’ நல்ல வாய்ப்பு உண்டாகும். இந்நூலைத் தமக்கு உரிமையாக்குவதற்கு இசைந்த உஸ்மானியப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் D. S. ரெட்டி அவர்களுக்கு என் வணக்கமும் நன்றியும் உரியனவாகும். இவ்வாய்ப்பினைத் தந்த அவர்களுக்கும் அவர் வழியே பல்கலைக் கழக மானியக் குழுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன். சென்றவிடங்களிலெல்லாம் எனக்கு உற்று.ழி உதவிய அன்பர்களேயும் நண்பர்களையும் தனியாகக் குறித்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி உரித்தாகுக. அறியா வகையில் விடப்பட்டபோதும் ஆங்காங்கு ஒல்லும் வகையில் உதவிய அன்பர்கள் அனே வரையும் என்னுல் மறக்க முடியாது. எல்லாவிடங்களிலும்