பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

53


கால் முடப்பட்டோர், கண்ணற்றோர், கிழவர், அஞ்சும் பேடியர் ஆகியோரிடம் போர்க்குச் செல்லான். கூற்றிடம், பகையிடம் போர் செய்யக் குதித்தோடுவான்.

கொடைத் திறன் அது படைத் திறன் இது!


51. மலையைப் பாடினோம், மங்கை அழுதாள்!

“வாருங்கள் புலவரே” என்று கை கூப்பி வரவேற்றான் பேகன்.

“பேகனே, இது கேள்” என்று தொடங்கினார் கபிலர்.

“வழியே நடந்து வந்தோம். வருத்தம் மிகுந்தது பசி வாட்டிற்று. சிற்றுார்க்குச் சென்றோம். ஒரு வீட்டில் தலை வாசலில் நின்று உன்னைப் புகழ்ந்தோம். உன் மலையைப் பாடினோம். அப் பாடலைக் கேட்டு கொண்டிருந்தாள் மங்கை ஒருத்தி. அவள் கண்களிலிருந்து நீர் பொங்கியது நில்லாமல் அருவி போல் ஓடியது.


52. யாம் வேண்டுவது பரிசில் அல்ல!

குளிரால் நடுங்கிய தென்று கருதி கோல மயிலுக்குத் போர்வை அளித்த மன்னவா, நாங்கள் உன்னை வேண்டி வந்தது பரிசில் அல்ல!

களாக் கனி போன்ற கரிய யாழை நாங்கள் மீட்டினோம். அது கேட்டு நீ தலையாட்டினாய், இனிய இரையை சுவைத்தாய். எங்கள் இசையின்பத்தைப் பருகிய பின் நாங்கள் கேட்கும் வரம் கொடுக்க வேண்டியதும் நியதியேயாகும்.