உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



97. “கை வேல்”

பாண்டியன் சிறுவன் என்றனர். சினமிகுந்து எழுந்தான் நெடுஞ்செழியன். சிற்றரசர் ஐவரோடு சேரனும் சோழனும் கூடித் தலையாலங்கானத்தில் எதிர்த்தனர். பகைவர் வீழ்ந்தனர். இருபெருவேந்தரும் போர்க்களத்தில் மடிந்தனர். அவருடைய முரசம் நெடுஞ்செழியன் கைக்கு வந்துவிட்டது.

அவர்களுடைய மனைவியர் அழுது கொண்டு ஓடிவந்தனர். இறந்த கணவரை எண்ணிக் கதறித் துடித்தனர். கைம்மைக் கோலம் பூண்பதற்காகக் கூந்தலைக் களைந்தனர். இக்காட்சியைக் கண்டன செழியன் கண்கள். நெஞ்சத்துள் இரக்கம் புகுந்தது. கைவேல் போரிடுதலைத் தானாகவே நிறுத்திற்று.


98. இரந்து, உயிர் கொண்டான் எமன்

சோழன் கிள்ளி வளவன், குள முற்றத்து அரண்மனையில் இறந்தான் என்ற செய்தி நாடெங்கும் பரவியது. நப்பசலையார் அதனை நம்பவில்லை.

“நமன் வந்துதானே கொண்டுபோயிருப்பான்? வளவன் முன் நமன் எம்மாத்திரம்?

“போர் செய்திருந்தால் அப் புல்லன் நொறுங்கியிருப்பான். விற்போராயினும் சரி, மற்போராயினும் சரி. எப்போரிலும் வளவன் வென்றேயிருப்பான். ஆயின் நமன், பாணரைப்போல் வந்து பாடித் தொழுது, வளவன் உயிரையே பரிசிலாய்க்