பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அச்சுப்பாடு

16

அச்சுறுத்தல்


composing. Setting printing types in order கையால் அச்சுக்கோத்தல் இப்பொழுது அரிதான ஒன்று. Hand composing has now become rare.

அச்சுப்பாடு - அச்சிட்ட செய்தி, printout. Take a printout in a computer.

அச்சுச் சுற்று - 'கடத்தும் மின் சுற்று, printed circuit. இதன் பகுதிகள் கடத்தும் பொருளினால் இணைக்கப்பட்டுள்ளன. An electronic circuit in which the components are connected by a conducting material.

அச்சுச் சூலமைவு - தாவரச் சூல் பையில் சூல்கள் அமைந்திருக்கும் வகையில் ஒன்று. Axial placentation in which the ovules are arranged along the central axis of the ovary.

அச்செழுத்து -அச்சடிக்கப் பயன்படும் எழுத்து, printing type ஒளியச்சுக் காரணமாக இது இப்பொழுது இல்லையென்றே சொல்லலாம். Now it is rarelly used because of laser printing.

அச்சுத்தலை -' வார்ப்புப் பொறியின் தலைப்பகுதி, die head.

அச்சுத் தொழில் - அச்சடிக்கும் பணி, printing industry. அச்சுத்தொழில், வளர்ந்து வரும் தொழில்: Printing industry is a flourishing industry.

அச்சுத் தொழில்நுட்பவியல் - தொழில் துணுக்க அச்சுக்கலை, Printing technology, the study of technical aspects of printing.

அச்சு நரம்பிழை - நரம்பிழை வகை, axon, உயிரணுவிலிருந்து துடிப்பு களை வெளியே கடத்துவது. Axon, the long nerve fibre conducting impulses away from the cell body.

அச்சுநாடுகள் - இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள். The Axis. Germany, Italy and Japan had alliance in World War II.

அச்சுப்படி - பிழைகள் திருத்த வேண்டிய அச்சு நகல், proof, The printed matter with errors to be corrected.

அச்சுப்படித் திருத்துபவர் - அச்சுப் பிழைத்திருத்துபவர், proof reader one who corrects errors in proof. அச்சுப்படி திருத்தல். Proof reading.

அச்சுப் படிவம் - அச்சடித்த படிவம் printed form, விண்ணப்பம் ஒரு அச்சடித்த படிவம். An application is a printed form.

அச்சுமை - அச்சடிக்கும் மை. இது கருப்பு மையாகவும் வண்ண மையாகவும் கிடைப்பது. Printing ink is available both in black and colour.

அச்சு வார்ப்பவர் - அச்சு செய்பவர். Die caster, One who casts die.

அச்சு வார்ப்பு - அச்சு செய்தல், Die cast or casting die.

அச்சு வெல்லம்- வார்ப்பாக அமைந்த வெல்லம் mould jaggary, rectangular in shape.

அச்சுதன் - நிலைபேறுள்ள கடவுள். God, the Imperishable.

அச்சுத் திரட்டு - அச்சுத் தண்டின் இரு முனைகளையும் சீர் செய்தல் Axis rounding for uniform thickness.

அச்சுறுத்தல் - அச்சம் ஏற்படுமாறு செய்தல். பயங்கரவாதம் நாட்டின் ஒற்றுமைக்கு ஓர் அச்சுறுத்தலாகும். Threat, intimidation. Terrorism is a threat to the unity of a country.