பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

டி ன் வளத்தை நவிலல் வேண்டுமோ ? கன்னலின் (கரும்பின்) வளர்ச்சி கமுகினேப் (பாக்கு மரத்தை) போன்றது. செந்நெல் வளர்ச்சி செழுங்கரும்பின நிகர்த்தது. காடெல்லாம் கழைக் கரும்புகளும் மாடெல்லாம் கருங்குவளைகளும், வயல் எல்லாம் வளைகளும் மலிந்திருந்தன. ஆண்டு விளையும் நெல்லின் வளர்ச்சி இம்மைப் பயனுடன் அம்மைப் பயனும் அறிவிப்பன போல வளர்ந்திருந்தது. இதனைச் சேக்கிழார்,

பத்தியின் பால சாகிப் பரமனுக் காளாம் அன்பர் தத்தமில் கூடி ஞர்கள் தலைபிளுல் வணங்கு மாபோல் மொய்த்தநீள் பத்தி யின்பால் முதிர்தலை வணங்கி மற்றை வித்தகர் தன்மை போல விளங்தன சாலி எல்லாம்:

என்று வியந்து பாடுகிருர்.

இம்மாண் புடைப் பதியில் வாழும் மக்கள் பண்பும் மாட்சியுற்றிருந்தது. பழியஞ்சிப் பாத்துண் னும் பழக்கமே உல்டயராய் வாழ்ந்தனர். பகடு நடந்த கூழினை அரசு கொள் கடன் அளிப்பார்; மிகுதிகொண்டு அறங்கள் பேணுவார்; பரமனுங் கடவுள் போற்றுவார்; குரவர்க்கும், விருந்தினர்க்கும், கேளிர்க்கும் விரும்பிக் கொடுப்பார்.

இக்காலத்தில் ஆங்காங்குப் பூங்கா அமைத்துப் பொது மக்களின் சுகாதாரப் பொறுப்பைக் கண்ணும் கருத்துமாய் நகராண்மைக் கழகம் போற்றி வரு வதைக் கண்டு நாம் நனி வியக்கின்ருேம். இச் செய8லச் சோழ நாடு அக்காலத்திலேயே சோர் வின் றிச் செய்து வந்தது; கா வளர்த்தும், செய்