உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

தரணியில் பலநாள் தழைத்திருக்க வேண்டும் என உளங்கொண்டார்; ஆதலின், தாம் உயிர் விடத் து னி ந் த ைத நிறுத்திக்கொண்டார்; அன்று முதல் அணி அலங்காரங்களே அறவே ஒழித்தார். கைம்மைக்கோலமே கடமையாகக் கொண்டார். இல்லத்தில் இருந்தே தவ ஒழுக்கத்தை மேற் கொண்டு எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொ ழுகும் சீலத்தராய் விளங்கினர்.

இதனைச் சேக்கிழார் செந்தமிழ் செம்மையுறச் சித்திரித்திருப்பதைப் படித்துப் படித்துச் சுவைக்க வேண்டுவது நம் கடமை. அச்செந்தமிழ்ப் பாடல்,

தம்பியார் உளராக வேண்டுமென வைத்ததயா

உம்பருல கனயவுறு கிலேவிலக்க உயிர்தாங்கி

அம்பொன்மணி நூல்தாங்கா தனத்துயிர்க்கும் அருள்தாங்கி

இம்பர்மனத் தவம்புரிந்து திலகவதி யார் இருந்தார்’ என்பது.

இதன் திரண்ட பொருள், தம்பியார் உயிருடன் இருக்க வேண்டும் என்னும் கருணையால் விண் ணுலகு அடைய நினைத்த நினைப்பை ஒழித்து, அருட்பண்பைத் தாங்கி மங்கல அணியை (தாலி) நீக்கி, வீட்டிலேயே தவநெறியில் வாழ்வார் ஆளுர்,” என்பது. இச் செய்யுள் சொல்லழகும் பொருளழகும் தருவதோடு அம்மையாரது அருள் அ ழ ைக யு ம் எத்துணையழகாக நமக்கு எடுத்துக் காட்டுகிறது, பாருங்கள்!

சின்னுள் சென்ற பின் மருள் நீக்கியார் சைவ சமயம் விட்டுச் சமண சமயம் புகுந்தார். திலகவதி