பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

விதித்தபடி செய்து வறுமை வாராதபடி தடுத்து வந்தார்கள். ஒதல், ஒதுவித்தல், ஈதல், ஏற்றல், வேட்டல், வேட்பித்தல் என்னும் அறுதொழில்களை யும் சிறிதும் வழுவல் இன்றி ஆற்றி வந்தார்கள்.

இவ்வந்தணர் குடியில் கலயர் என்னும் கவிஞர் பெரியார் வாழ்ந்து வந்தனர். அவர் குங்கிலியக் கலயம்கொண்டு சிவத்தொண்டு புரிந்தமையால், கலயர் என்று வழங்கப்பட்டு வந்தார். அவர் அறிவு நிரம்பப் பெற்ற அந்தணர் சிகாமணியாய் இருந் தமையாலேதான் வேணிப்பிரான் (சிவபெருமான்) கழல் பேணி வாழும் பெற்றி பெற்றனர்.

  • கற்றதல்ை ஆய'பயன்என்கொல் வாலறிவன்

நற்ருள் தொழாஅர் எனின் ’’ என்னும் குறட்பொருளே உணர்ந்து இறைவரிடத்து உருகிய அன்பும் கூர்த்த சிந்தையும் வாய்ந்து ஒழுக் கம் வழுக்கா ஒண்மையும் உடையராய்த் திகழ்ந்தார்.

சேக்கிழார் கலயனர் குணநலங்களைக் குறிப்பிடு கையில் ஈறில் ஒழுக்கம் மிக்கார் என்று நினைவுடன் கூறியதைச் சிறிது சிந்தித்தல் வேண்டும். மக்கள் குடிப்பிறப்பால் தம்மை உயர்வாகக் கருதுதல் வழக்கமாய் இருந்து வருகிறது. அது முறையன்று. ஒழுக்கமே உயர்வுக்குக் காரணம் என்பது வள்ளு வர் போன்ற தெள்ளறிவுடையார் துணிபாகும். இத் துணிவு பொய்யில் புலவராம் திருவள்ளுவர்க்கு இன்று எனில்,

  • ஒழுக்கம் உடைமை குடிம்ை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும் ”