உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானிட உடல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்டோகிரீன் மண்டலம் 143 கின்றன என்பதை நாம் கினேவிலிருக்த வேண்டும். நாம்பு மண்டலம் இத்தாண்டல் உள்துடிப்புக்களாக மாற்றுகின்றன; உள்துடிப்புக்கள் அடித்தலைச் சுரப்பியிலிருந்து ACTH-58 விடுவிக்கின்றது. இவ்வாறு விடுவிக்கப்பெற்ற ACTH மாங் காய்ச் சுரப்பியைத் தாண்டி சுறுசுறுப்பாக இயங்கச் செய் கின்றது ; இதனுல் அதிக ஹார்மோன்கள் உற்பத்தியா கின்றன. இவ்வாறு உடலிலுள்ள பல்வேறு பகுதிகளும் தேவையான அளவு அட்செனுேகார்ட்டிகல் ஹார்மோன்களே அடைகின்றன. வேதியல் முறைப்படி நோக்கினுல் அட்ரெனேகார்ட்டி கல் ஹார்மோன்கள் ஸ்டெராய்டுகள்’ என குழுப் பொருள் களாக வழங்கப் பெறும் பொருள்களின் இனத்தைச் சேர்க் தவை. ஆண்பால் ஹார்மோனும் பெண்பால் ஹார்மோனும் ஸ்டெராய்டுகளே ; ஆயினும், அவை முக்கியமான வேதியல் இயைபுப் பொருள்களில் வேறுபடுகின்றன. மானிட மாங் காய்ச் சுரப்பி பல ஸ்டெராய்டுகளே உற்பத்தி செய்கின்றது என்பது ஒரு சிறந்த ஆதாரம் ஒன்றில்ை தெரிய வருகின்றது. ஹைட்ரோ கார்ட்டிஸோன் (F கூட்டுப்பொருள்) அதிக அளவில் சுரக்கின்றது. கார்ட்டிலோன் (E-கூட்டுப்பொருள்) F - கூட்டுப் பொருளுடன் நெருங்கிய உறவுகொண் டிருப்பி னும், மானிடச் சுரப்பியினுல் உற்பத்தி செய்யப் பெறு வதில்லை. மிகச் சிறிய அளவில் உற்பத்தி செய்யப் பெறக் கூடிய, ஆனல் மிகவும் முக்கியமான மற்ருெரு ஹார்மோன், எலக்ட்ரோகார்ட்டின் அல்லது ஆல்டோஸ்டெரோன் என்பது. இந்தக் கூட்டுப்பொருள் அண்மையில்தான் பிரிக் கெடுக்கப் பெற்றது. இன்று நாம் அதைப்பற்றித் தெரிந் திருப்ப தெல்லாம் அது சோடியம், பொட்டாசியம், நீர் வளர்சிதை மாற்றவும் - ஆகியவற்றின் வீரியமான விளைவுகளே உண்டாக்குகின்றது என்பதே. மாங்காய்ச் சுரப்பியின் புறணி யும் பிற எண்டோகிரீன் சுரப்பிகளில் சிலவும் வேதியல் தொகுப்பில் சில வியத்தகு செயல்களேப் புரிகின்றன ; எந்த வேதியற் புலவர்களும் செய்ய இயலாத மிகச் சிக்கலான செயல்கள் அவை. மாங்காய்ச் சுரப்பியின் புறணி குருதியி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/167&oldid=865945" இலிருந்து மீள்விக்கப்பட்டது