பக்கம்:மானிட உடல்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 மானிட உடல் படம் 54. கரு அணு விாைப்புழுவால் கருவுறல். அடுத்து இந்த இரண்டு அணுக்களும் நான்காகப் பிரிகின்றன. கருவுற்ற முட்டையின் அணுக்கள் பிரிந்துகொண்டு வளரத் தொடங்கியவுடன், அது சினேக் குழலிலிருந்து கருப்பைக் குள் இறங்குகின்றது. இவ்வாறு அனுப் பிரிவு ஏற்பட்டு கருப்பந்து எனப்படும் ஒரு அமைப்பை உண்டாக்குகிறது. கிட்டத்தட்ட கருவுற்ற ஒன்பது நாட்களுக்குப் பிறகு கருப் பந்து கருப்பையின் உட்புறத் தசைக்குள் தன்னைப் புதைத்துக் கொள்ளுகிறது (படம் 55). கருப்பந்தின் வெளியோரத்தி லுள்ள அணுக்கள் செழிப்பாகவுள்ள கருப்பையின் உட்புறத் தசையினுள் நன்முகப் படிந்துகொள்கின்றன ; இந்தத் தசை மாதவிடாய் வட்டத்தின்பொழுது தயாரானது. ட்ரோபோ பிளாஸ்டுகள் எனப்படும் இவ் வனுக்கள் கோரியோனிக் கோனடோ ட்ரோபின் என்ற ஹார்மோனைச் சுறுசுறுப்பாகச் சுரக்கின்றது. இந்த ஹார்மோன் கார்ப்பஸ் லூட்டியத்தால் சுரக்கப்பெறும் எஸ்ட்ரோஜென்கள், புரோஜெஸ்ட்ரோன் என்பவை சரியான முறையில் சுரப்பதற்குத் துணையாக அமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/220&oldid=866061" இலிருந்து மீள்விக்கப்பட்டது