உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானிட உடல்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 மானிட உடல் கினேவில் வைத்தல், வழியை அறிதல், பாடல்களே இன்னவை என்று அறிதல், இசைக் கருவிகளை இயக்குதல், பார்வை யிலுைம் தொட்டுணர்வதாலும் பொருள்களே இனங் காணல், பல்வேறு வண்ணங்களே இன்னவை என்று கூறல் - ஆகிய எண்ணற்ற செயல்கள் யாவும் கினைவுகளைத் திரட்டி யறிதலின்பாற்பட்டவை. மிகவும் சிறப்பாகவுள்ள இச் செயல்கள் யாவும் பெரு மூளையின் ஒர் அர்த்த கோளத்திற்குள் அடங்கியுள்ளன. வலது கைப்பழக்கமுள்ளவர்களிடம் இடப்புற அர்த்த கோளம்தான் இச் செயல்களின் இடமாக அமைகின்றது. அதன் காரணமாகவே, வலது கைப்பழக்கமுள்ளவர்களின் இடப்புற அர்த்த கோளம் பெரிய அர்த்த கோளம் அல்லது ஆட்சி செலுத்தும் அர்த்த கோளம் என்று வழங்கப்பெறு கின்றது. இதன் மறுதலை முழுதும் உண்மையன்று அஃதா வது, இடது கைப்பழக்கமுள்ளவரின் வலப்புற அர்த்த கோளம் அவ்வளவுக்கு ஆட்சி செலுத்தவல்லது என்று கூற முடியாது. இவ்வாறு செயல்களின் அமைப்புக்கள் இருத்தலைத் தவிர, புறணியின் இந்தப் பரப்புகள் யாவும் பாந்த, மிகச் சிக்கலான வலைக்கண் வேலைப்பாடுகளமைந்த நாப்ப விழுதுகளால் ஒன்ருே டொன்று இணைக்கப்பெற்றுள்ளன. போவதற்கும் வருவதற்குமுரிய இணைப்புக்கள் சரியாகப் பொருந்தியிருந்தா லன்றி எந்தப் பகுதியும் செயற்படாது. ஒரு குறிப்பிட்டப் பகுதிக்குப் போகும் வழிக்கோ அல்லது வரும் வழிக்கோ தீங்கு பயந்தால், ஒரு குறிப்பிட்ட செயலை தடைப்படுத்த முடியும். மூளையை அதன் செயலின் அடிப்படையில், வரிசை அமைப்பில் பிணைக்கப்பெற்ற மின்கல அடுக்குகளுடன் (பாட்டரி) ஒப்பிடலாம். எ.காவது ஒன்றை வெளியில் எடுத்து விட்டால் முழு அமைப்பும் செயற்படாத நிலையை அடைந்து விடும். குறிப்பிட்ட சில செயல்கள் புறணியின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்குரியவை என்று பொருத்திக் கூற முடிக் தாலும், மொத்தமாகப் பார்த்தால் மூளேதான் எல்லாச் செயல் களேயும் ஆட்கொண்டு ஒழுங்குபடுத்துகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/258&oldid=866139" இலிருந்து மீள்விக்கப்பட்டது