பக்கம்:மானிட உடல்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 231 வெண் படலம் தோலுடன் தொடர்ந்தே உள்ளது ; தோலைப் போலவே அதுவும் அடுக்கடுக்கான எபிதீலியத்தாலும் இணைக்கும் இழையத்தாலும் ஆனது. எனினும், கோலைப் போலல்லாது, அதில் நிறமியே இல்லை; அதன் இணைக்கும் படம் 70. கண்ணின் விழித்திரையில் காணப்பெறும் அம்பின் தலைகீழான விம்பம். 1. கண் இமை. 2. கரு விழி. 8. வில்லை. 4 விழி வெளிப் படலம். 5. விழித்திரை. 6. விழியடி யுறை. 7. பார்வை நாம்பு. 8. விழி வெண்படலம். இழையத்திலும் குருதிக் குழல்கள் இல்லை. விழி வெண் படலத்தில் தீங்கு நேரிட்டால் அதுவும் தோலைப் போலவே வெகு விரைவில் சீர்படக் கூடும் ; ஆனல், அதனுள் குருதிக் குழல்கள் வளர்ந்து ஒளி செலுத்தும் திறனைக் கெடுத்துவிடக் கூடும். கண்ணின் ஏனைய பகுதி எல்லாம் சரியாக இருந்து விழி வெண்படலம் மட்டிலும் குழம்பி மந்தமா யிருந்தால் நாம் பார்க்க இயலாது. அதிர்ஷ்டவசமாக, உடலின் எனைய பகுதியைக் காட்டி லும் விழி வெண்படலம் நீண்ட ஆயுளேக்கொண் டிருக்கும் திறனைப் பெற்றுள்ளது. உண்மையில், அத்திறனின் எல்லை நமக்குத் தெரியாது. அதன் காரணமாகத்தான் சற்று நோக் திற்கு முன்னர் மரித்த ஒருவரின் விழி வெண்படலத்தை அகற்றி அதனை வேருெருவரின் ஊறுபட்டுப்போன அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/269&oldid=866163" இலிருந்து மீள்விக்கப்பட்டது