பக்கம்:மானிட உடல்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 மானிட உடல் யிருக்கின்றன ; இந்த ஊன்பசைப் பொருளில் கால்சியப் பளிங்குகள் இருக்கின்றன. ஒதுக்கப்பெறும் இந்தப் பளிங்கு களின் பூகவர் விசைக்கேற்றவாறு மாறுபடுங்கால், அவை மயிர் போன்ற அணுக்களேக் தாண்டுகின்றன ; அதனுல் நாம் நம்முடைய கலை இருக்கும் நிலையினை உணர்கின்ருேம். &F-8 ఫ్రో உளக் கூறுபாட்டு கிலேயிலும் உடற் கூறுபாட்டு நிலை யிலும் சுவைபற்றிய நுட்ப உணர்வுகளைப் பிரித்தறிதல் அருமை. காரணம், நம் அனுபவங்களே யொட்டிய மன வெழுச்சிபற்றிய நிறைந்த அம்சம் அவற்றில் கலந்து கிடக் கின்றது. முதிர்ந்தவர்களிடம் இருப்பதைப் போலவே குழந்தைகளிடமும் சுவை யரும்புகள் உள்ளன. ஆயினும், குழந்தைகளிடம் அதிகமாக உள்ளன. வயது ஆக ஆக, முதிர்ந்தவர்களிடம் புகுவாய்களின் எண்ணிக்கை பல நூறு களிலிருந்து எழுபதிலிருந்து எண்பதுவரையிலுமாகக் குறைந்துவிடுகின்றது. எனினும், குழந்தையிடம் அபிப் பிராயம் என்ற ஒன்று அமையாததாலும், காகம் பசி போன்ற விடாய்களைத் தீர்த்துக்கொள்வது மட்டிலும் அவனுடைய நோக்கமாக இருப்பதாலும், பல முதிர்ந்தவர்களுக்கு இனிமை யற்றதாகவுள்ள சுவைகளால் குழந்தைகள் கலக்கம் அடைவ தில்லை. பல தாய்மார்கள் தம்முடைய குழந்தைகள் மிகவும் கசப்பான திரவ வடிவத்திலுள்ள, அதன் மணமும் தமக்கு அருவருக்கத் தக்கதாகவுள்ள, விட்டமின் கலப்பு மருந்தை எளிதாக விழுங்குவதைக் கண்டு வியப்புறுகின்றனர். இதன் காரணமாகவே குழந்தை வைத்தியர்கள் பெற்றேர்களைத் தம் குழந்தைகளின் முன்பதாக உணவுகளைப்பற்றிய வெறுப்புக் களைத் தெரிவிக்க வேண்டா மென்று கூறுகின்றனர். சுவை களையும் சுவைகளைப்பற்றிய கருத்துக்களையும் பதிப்பிட்டு வியத்தலே ஒரு பயிற்சியாகும்; அவை நாம் உணவு கொள் வதுடன் கொடர்புகொண்ட எல்லா சங்கர்ப்பங்களையும் பொறுத்திருக்கின்றன. உடல் முழுவதும் ஒரு பொருளேப்பற்றிய நமது விருப் பத்தில் அல்லது விருப்பக் குறைவில் பங்குகொள்ளுகிறது ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/282&oldid=866194" இலிருந்து மீள்விக்கப்பட்டது