உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானிட உடல்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை - எலும்பு மண்டலம் 263 முள்ளெலும்புப் பக்கமுனை முள்ளெலும்பு நடுமுனை படம் 82. முள்ளெலும்பின் குறுக்கு வெட்டுப் பாப்பு. ஒவ்வொரு முள்ளெலும்பிற்கிடையிலும் அமுங்கக் கூடிய மெத்தை போன்ற நாராலும் குருத்தெலும்பாலும் ஆன கெட்டியான இழையம் இருக்கிறது ; இந்த இழையத் தின் நடுவில் சோறுபோன்ற உள்ளணு ஒன்றிருக்கின்றது. இந்த வட்டத் தட்டுக்களின் கடற்பஞ்சு போன்ற தன்மை யால்தான் முள்ளெலும்பு குறிப்பிட்ட அளவு எல்லாப் பக்க மும் வளையவும் முறுக்கவும் முடிகின்றது ; சுமையைத் தாக் கும்பொழுதும் அமுங்குகின்றன. இந்த வட்டத் தட்டுகள் தாம் நாாாலும் குருத்தெலும்பாலும் ஆன மூட்டுக்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகும்; இம்மூட்டுகள் குறிப்பிட்ட அளவு அசையக் கூடியவை ; அவை மூட்டுச்சுரப்புப் பாய்மத்திலும் அமிழ்ந்திருக்கவில்லை. மார்புக்கூடு (படம்- 83.) பின் புறத்தில் முள்ளெலும்பு களாலும் முன்புறத்தில் மார்பெலும்பாலும் அவைகளுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/301&oldid=866239" இலிருந்து மீள்விக்கப்பட்டது