உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயக் கள்ளன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

119 “இடி பயங்கரமாக இடிக்கிறதே. தலமேல் இடி விழுந்தால் என்ன செய்வாய்?” "தாயையும் தந்தையையும் நினைத்துக்கொண்டு இருக்கும் என்னை இடி ஒன்றும் செய்யாது." இப்படிச் சொல்லிவிட்டு ஆத்மரங்கன் இடிக்கும், மழைக்கும் கவலைப்படாமல் மலைப்படிகளிலே காலெடுத்து வைத்தான். தனது தந்திரப் பலிக்கவில்லை என்றுணர்ந்த மாயக்

கள்ளன் மறுபடியும் கதையைத் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தான். ஆத்மரங்கன் மலை உச்சியின் அருகிலேயே வந்துவிட்டான். உச்சியிலிருந்த கோபுரத்தின் மேலிருந்த கலசங்களும் கண்ணுக்குத் தெரியலாயின. அந்தச் சமயத்தில் மாயக்கள்ளன் வேருெரு சூழ்ச்சி செய்தான். உடனே எதிரிலே பல அழகான பெண்கள் தோன்றினார்கள். அவர்களைப் போன்ற அழகான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/122&oldid=1277024" இலிருந்து மீள்விக்கப்பட்டது