உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#1 # மாயூரம் வேதநாயகம் பிள்ளை

கிறித்தவரான வேதநாயகம் பிள்ளை தமிழில் பாடிய சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் என்ற பாடலை கோபால கிருஷ்ண பாரதியார் மதிப்பும் மரியாதையும் காட்டி, சமயக் காழ்ப்பின்றி அரங்கேற்றி னார். அவர்போகும் தெருக்களிலே, பிரபுக்கள் முன்னிலையிலே திருவிழாக் காலங்களிலே பாடி வளர்த்தார்.

வேத நாயகம் பிள்ளை நீதிபதி மட்டுமல்ல; தமிழிலே நூற்றுக் கணக்கான அரிய உருப்படிகளை இயற்றினார். ராக பாவம் சனரஞ்சகமாக விளையாடிடும் இவருடைய உருப்படிகளிலே அபூர்வ ராகங்களும் காணப்படுகின்றன். ஒரே ராகத்தில் இவர் இயற்றிய பல பாடல்களையும் பார்த்தால், அவை ஒவ்வொன்றும் தனித்தனி அமைப்புடன் திகழ்வதைக் காணமுடிகின்றது.

இசை வளத்துடன் கூடிய இவை, மனத்தைக் கவரும் வர்ணமெட்டுக்களில் அமைந்துள்ளன. இவருடைய பல்லவி அமைப்பே அருமையானது என்பர் பாடல்களைப் பாடுவோர். சரணங்கள் பல்லவியைத் தழுவி நிற்கு அவை இசைக்கிசைந்த கமகங்கள், தாளக்கட்டுக்கள் உள்ளவை. இவருடைய உருப்படிகள் இசை கனிந்து சொற்சுவை பொருட் சுவை பொதிந்து, பொருத்தமான தாதுக்களிலே அமைந்து, நாக்குக்கு எளியன வாகவும், செவிக்கு இனியனவாகவும் பரவசப்படுத்துவன.

உருப்படிகள் என்றால் என்ன?

இசைஞர்கள் பாடிவரும் பாடல்களை உருப்படிகள் என்பார்கள். இசையுடன் கூடித் தாளத்திலே அமைந்த சாகித்தியம் உருப்படியாகும். உருப்படிகளை இயற்றியவர்களை வாக்கேயகாரர் என்பர். இவர்களை மக்கள் இசைப் புலவர் என்று அழைப்பார்கள். வேதநாயகம்பிள்ளை சிறந்த இசைப் புலவர் ஆவார்.