பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

எத்தனையோ இடையூறு மலைகள் குறுக்கே நிற்கும். அவை யனைத்தையும் கடந்து சிலர் எய்தலாம் புகழ் அவர்களிலே அரியர் நமது மாயூரம் முன்சிஃப் வேதநாயகம் பிள்ளை.

தமிழகத்தின் மண்ணில், திருச்சியிலே இருந்து மதுரை செல்லும் ரயில் பாதையில், திருச்சிக்கு அடுத்த சிற்றுர் வேளாண் குளத்தூர் என்ற சிறு கிராமம். இந்த கிராமம், சோழ மன்னர்கள் காலத்திலும், பாண்டிய வேந்தர்கள் காலத்திலும் 'கோனாடு' என்று அழைக்கப்பட்டது.

சென்னை, குன்றத்தூரில் சேக்கிழார் பெருமான் பிறந்த மண்ணுக்கு அடுத்த ஊர் கோவூர் கோனாடு என்பது போல இது கோஆர். இங்கே தான்் கோவூர் கிழார் என்ற சங்க காலப் பெரும் புலவன் பிறந்தார். அதுபோலவே, கோனாடு என்ற இந்தக் குளத்துர் பகுதி மண்ணிலே தான்், எறிச்சலூர் மாடலன் என்ற சங்கப் புலவர் பிறந்தார். எனவே, சான்றோர்கள் பிறந்து வளர்ந்து, ஆடிப்பாடி ஒடிய மண்ணிலே அடுத்து 5லை முறைகள் பிறக்கும் போது விட்டுப் போகுமா? மண்ணின் அறிவு வாசனை?

அந்த மண்வாசனைக்கு ஏற்றவாறு, சவரிமுத்துப் பிள்ளை, ஆரோக்கிய மரியம்மாள் என்ற ரோமன் கத்தோதிக்கக் கிறித்துவப் பெற்றோர்களுக்கு, அருமை மகனாக வேதநாயகம் பிள்ளை 11.10.1828 ஆம் ஆண்டில் பிறந்தார்.

சவரிமுத்துப் பிள்ளை கார்காத்த வேளாளர் சாதியிலே பிறந்தவர். செல்வச் சீமான், குளத்தூர் பகுதிமக்கள் மதிக்கும் அளவுக்கு எல்லா வசதிகளும் பெற்று வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சவரிமுத்துப் பிள்ளை மனைவியான ஆரோக்கிய மாரியம்மாள் திருச்சி மரிய சவரியா பிள்ளை என்ற டாக்டரின் மகள் ஆவார்.