உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

இங்கிலீஷ் மொழியிலே இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புக்களைத்

திரட்டினார். தமிழில் மொழி பெயர்த்தார். சித்தாந்த சங்கிரகம்

என்ற பெயரிலே 1862 ஆம் ஆண்டில் அவற்றை நூலாக

வெளியிட்டார் வேதநாயகம், சித்தாந்தம் என்றால் சட்டம்,

சங்கிரகம் என்றால் தொகுப்பு. அதனால் அப்பெயரிலே அவற்றை

భ్కీ

வெளியிட்டார்.

அவர் அந்த நூல்களை வெளியிடுவதற்கு முன்பு, அது போன்ற தமிழ் சட்ட நூல்கள் இருந்ததில்லை. எனவே, வழக்குகளிலே வாதமிடும் வழக்குரைஞர்களுக்கு அந்த நூல்கள் ஒரு புதையல் போலப் பயன்பட்டன. சட்டத்துறையில்,அன்றுவரை, அப்படிப் பட்ட சட்ட நுணுக்க நூல்களே கிடையாது. வேதநாயகம் தான்் முதன் முதலில், தமிழ் மொழியில் அவை போன்ற நூல்களை அரும்பாடுபட்டு தயாரித்து வெளியிட்ட முதல் தமிழறிஞர் ஆவார்.

கி.பி. 1862, 83 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புக்களையும் திரட்டி, தமிழ்ப் படுத்தி, 1864 ஆம் ஆண்டிலும் அதே சட்ட நூல்களை வெளியிட்டார். இவைதான்் சட்ட நுணுக்கங்களைப் பற்றித் தமிழிலே வெளிவந்த ஆதி நூல்கள். இப்படிப்பட்ட சட்ட நூல்கள் அதற்கு முன்பு வெளிவந்தது இல்லை; அதற்குப் பிறகும் வெளிவரவில்லை; வெளிவந்த அந்த நூல்களும் இன்று கிடைக்கவுமில்லை.

திரட்டிய அந்த நீதிமன்றத் தீர்ப்புகளை எல்லாம் அவர் ஒருவரால் எழுத முடியவில்லை. அவ்வளவு தீர்ப்பு முடிவுகள் மலைபோலக் குவிந்து கிடந்தன. இருந்தாலும், வேதநாயகம் அவற்றை ஆராய்ந்து அல்லும் பகலும் படித்துக் கொண்டே இருப்பார். தனது சொந்தப் பணத்தில் சம்பளத்துக்கு ஒராளை நியமித்து, வேதநாயகம் அவற்றை மொழி பெயர்த்துத் தமிழில்