பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

உண்மை, ஒழுக்கம், நேர்மை முதலிய அவர் குண நலங்களைப் புகழாமல் இருக்க மாட்டார்கள். அதனால், நேர்மையற்ற நீதிபதிகளுக்கு அக்கிரம அதிகாரிகளுக்கு அநியாயவாதிகளுக்கு, நியாயம் நேர்மைகளுக்கு நிலைக்களனான வேதநாயகம் பிள்ளை கூறிய அறிவுரைகளைத் தொகுத்துச் சுருக்கி, முடிந்தவரை அவரது மொழியிலே, வழங்குகின்றோம்.

"அற்பனுக்கு ஐசுவரியம் வந்தால், அர்த்த ராத்திரியிற் குடை பிடிப்பான்' என்பது பழமொழி அவனுக்கு அதிகாரம் கிடைத்தவுடனே தன்னுடைய முன்னைய நிலையை அறவே மறந்து தன்னை ஒரு அவதார புருஷன் போல எண்ணிக் கொள்வான். வித்தையிலும், புத்தியிலும், தனத்திலும், குலத்திலும் தனக்குச் சமானமானவர்கள் ஒருவரும் இல்லை என்று இறுமாந்திருப்பான்.

அவன் இருக்கிற இடத்திலே ஈ பறக்கக் கூடாது: எறும்பு ஊரக் கூடாது குருவி கத்தக் கூடாது; ஒருவரும் பேசக் கூடாது; எப்போதும் நிசப்தமாய் இருக்க வேண்டும்; அவனுடைய வீட்டுக்கு எதிரே ஒருவரும் சோடு போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது; அங்க வஸ்திரம் போடக்கூடாது கைவீசிக் கொண்டு நடக்கக்கூடாது தாம்பூலம்தரிக்கக்கூடாது; சிங்கத்தின் குகையிலே ஒரத்திலே போகிறது போல, இவன் வீட்டுக் கெதிரே செல்லுகிறவர்களும் நடுங்கிக் கொண்டு நிசப்தமாகப் போக வேண்டும்.

அவன் வெளியே புறப்பட்டால் உட்கார்ந்திருக்கிறவர்கள் எல்லாரும் எழுந்துவிட வேண்டும். நடக்கிறவர்கள் எல்லாரும் நின்று விட வேண்டும், சகலரும் பூமியிலே விழுந்து சாட்டாங்கத் தண்டஞ் செய்ய வேண்டும், அப்படிச் செய்யாதவர்களுக்கு ஆக்கினைகளும், அபராதங்களும் கிடைக்கும்.