பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

கைலஞ்சம் வாங்குகிறார்கள். அதைச் சீரணம் செய்ய, இருதிறத்தாருக்கும் சிறிது சாதகமும், சிறிது பாதகமும் செய்கிறார்கள். சாதகம் செய்யக் கூடாத நிலையிலே இனிவரும் வழக்குக்கு அச்சாரமாகவும் வைத்துக் கொள்ளுகிறார்கள். அன்றியும், அவர்களுக்கு வேண்டிய துணியை சவளி வியாபாரிகள் தருகிறார்கள். தான்ிய தவசங்களை நிலச் சுவான்கள் கொடுக்கிறார்கள். உப்பு முதல் கற்பூரம் வரை அவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன.

'கள்ளர் அமாவாசையிலே மட்டும் திருடப் போக்றாா. சில அதிகாரிகள் அல்லும் பகலும் கொள்ளை அடிக்கிறார்கள். இவர்கள் அடிக்கும் கொள்ளைக்குக் கள்ளர் கொள்ளை உறை போடக் காணுமா?

'கள்ளர்கள் அகப்பட்டு, இவர்கள் முன் விசாரணைக்கு வரும்போது, 'குயவனுக்குப் பல நாள் வேலை தடிகாரனுக்கு ஒரு நாள் வேலை என்பது போல, பலநாள் அவர் திருடிச் சேர்த்த பொருளை ஒருநாளில் இவர்கள் தட்டிப் பறித்துக்கொள்கிறார்கள்.'

'திருடரிடத்திலும் திருடுகிற திருடர் எத்தகைய திருடராய். இருக்கவேண்டும்? பசுவுக்குப் புலியும், கிளிக்குப் பூனையும் காவல் வைத்தது போல, மக்களுக்குப் பாதுகாவலாக இவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் - என்கிறார் வேதநாயகர்,

'சில அதிகாரிகள், லஞ்சம் வாங்கினால் பெயர் கெட்டுப் போகும் என்றஞ்சி, தங்கள் வீடுகளிலே நடக்கிற விசேட தினங்களில் சகல பொருள்களையும் பற்றிக் கொள்கிறார்கள். கலியாணங்களும், ருது சாந்திகளும், உபநயனங்களும் சிரார்த்தங்களும் அவர்கள் வீடுகளிலே அடிக்கடிவரும்.

'கல்லுளிச் சித்தன் போனவழி, காடு மேடெல்லாம் தவிடு பொடி சில பெரிய அதிகாரிகள் அவர்களுடைய அதிகார