உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

இலஞ்சம் கொடுப்பவரைத் தண்டிப்பது என்ற விதியை நாம் அனுசரிக்கக் கூடாது. நமது அரசியலாருக்கு இந்த அறிவு சமீப காலத்திலேதான்் வந்துள்ளது. ஒருவன் இலஞ்சம் வாங்குகிறான் என்றாவது, வேறு தீயச் செயல்களைப் புரிகின்றான் என்றாவது, பலருக்கும் பகிரங்கமாய்த் தெரிந்தால், அதைப் பற்றி விசாரணை இன்றி. அவன் மீது புகார் வராமல் இருந்தாலும் கூட, அவனை உடனே விலக்கிவிட வேண்டும்.

யோக்கியமான உத்தியோகத்தனை நன்கு மதித்து, நடத்தல் வேண்டும். மூப்பு நோய் முதலியவற்றால், வேலை பார்க்க இயலாவிடின், அவர்களுக்கு உபகாரச் சம்பளத்துடன் ஒய்வு கொடுக்க வேண்டும். அகால மரணம் அடைந்தால், அவர் குடும்பப் பராமரிப்பை அரசாங்கம் ஏற்கவேண்டும். பிற்காலக் குடும்ப வாழ்வைக் கருதியே பலரும் இலஞ்சத்தைக் கையாளுகிற படியால், அரசாங்கம் தமது குடும்பத்தைப் பாதுகாக்கும் என்ற நிச்சயமிருந்தால், பலரும் இலஞ்சம் வாங்காமல் பரிசுத்தராய் இருப்பர்' என்று. வேதநாயகர் கூறுகிறார். அதை வலியுறுத்தி அவர் எழுதியுள்ள பாடல் ஒன்றில்:

'ஏதுக்கு வாங்குகிறிர் இலஞ்சம் - உமக்கு இதைவிட வேறுண்டோ பஞ்சம் வாதுக்கு வீணே வழக்குரை பேசி -

வாங்குகிறீர்; என்ன பிழைப்பு அது? சீசி ஏதுக்கு வாங்குகிறீர் லஞ்சம்? இப்படி லஞ்சத்தை ஒழிக்க வேதநாயகம் பிள்ளை பாடியுள்ள பாடல்கள் பல உள்ளன. அவற்றிலே ஒரு பாடல் இது;

இராகம் , பியாகடை - சாப்பு

ஆர்வேனுமோ அவர் வாங்கட்டும்