பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

எப்போதும் என்னுள்ளத்திலே தாங்கள் குடிகொண்டிருக் கிறீர்கள். என்னை விட்டுப் பிரியச் சற்றும் தாங்கள் சம்மதிக்க மாட்டீர்கள் என்று நான் துணிவுடனிருக்க, என்பால் வந்த மகாவித்துவானோ. தாங்கள் திருவாவடுதுறையிலே இருப்பதாகச் சொல்லுகிறார். இது பொய்தான்ே அவரோ மாபெரும் புலவர்; அவர் பொய் சொல்லவும் படித்தார் போலும்!

-என்று. வேதநாயகம் பிள்ளை, மகா சந்நிதான்ம் பூரீ கப்பிரமணிய தேசிகருக்கு ஒரு செய்யுள் எழுதி தனது 'அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்ற தமிழ் நேயப் பாசத்தை தெரிவித்துக் கொண்டார். செய்யுளைப் படித்த தேசிகர், வேத நாயகம் பிள்ளை கிறித்துவரானாலும், மத, இன, சாதி, பேதம் கடந்த மனிதநேய ஞானி என்பதை உணர்ந்து மகிழ்ச்சி பெற்றார்.

'மகாவித்துவான் பொய் சொல்லவும் படித்தார் போலும் என்ற செய்தி அடங்கிய செய்யுளைக் கண்ட திருவவடுதுறை பண்டார சந்நிதான்ம், மிகவும் மகிழ்ந்தார். அவரைக்காண வேண்டுமென்று முன்பிருந்த ஆசை அவருக்கு மேலும் அதிகமாயிற்று. அதனால், தான்ே நேரில் சென்று வேதநாயகரைக் காணவேண்டும் என்று தேசிகர் விரும்பினார்.

அதற்கேற்ப அப்போது துலா மாதம் சூரிய கிரகணம் வந்தது. காவிரியில் மக்கள் அன்று நீராடுவது பழக்கம். அதற்கேற்ப, சந்நிதான்ம் மாயூரம் வர இருப்பதாகவும், துறவி ஒருவர், இல்லறவாசிகள் இல்லம் செல்வது தகாது என்றும, எனவே, நேரில் வந்து தன்னைச் சந்திக்குமாறும் வேகநாயகருக்கு தேசிகர் செய்தி அனுப்பினார்.

அதைப் பெற்ற வேதநாயகர், அதற்கு ஒரு பதிலையும் கவிதை வடிவில் அனுப்பினார். அதில் "புலவன்தான்் பொய் சொன்னான் இப்போது தேசிகர் சொல்வதோ அதைவிட மிகவும் விசித்திரமாக இருக்கிறது என்மனையகத்து எங்கே பார்த்தாலும் தாங்களே