பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

'அகத்தியன் நாவிலே பிறந்து, ஆரியத்தின் மடியிலே வளர்ந்து, ஆந்திரம் முதலிய மொழிகளின் தோழமை பெற்று, சங்கப் புலவர்களுடைய நாவிலே சஞ்சரித்து, வித்துவான்களுடைய வாக்கிலே விளையாடி, திராவிட தேசம் முழுவதும் ஏக சக்ராதி பத்தியம் செலுத்தி வந்த தமிழ் அரசியை இப்போது இகழலாமா?

நம்மைப் பெற்றதும் தமிழ் வளர்த்ததும் தமிழ்: நம்மைத் தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ், நம்முடைய மழலைச் சொல்லால், நமது தாய் தந்தையரை மகிழ்வித்ததும் தமிழ், நாம் குழந்தைப் பருவத்திலே பேச ஆரம்பித்த போது, முந்தி உச்சரித்ததும் தமிழ் நம்முடைய அன்னையும், தந்தையும் நமக்குப் பாலோடு புகட்டினதும் தமிழ், இப்போதும் நம்முடைய மாதா பிதாக்களும் மற்றவர்களும் பேசுகிற மொழி தமிழ் வீட்டு மொழியும் தமிழ் நாட்டு மொழியும் தமிழ்,

சொந்த மொழியை நாம் கைவிடுவதா?

இத்தகைய அருமையான மொழியை விட்டு விட்டு, சமஸ்கிருதம் லத்தீன் முதலிய அந்நிய மொழிகளைப் படிக்கிறவர்கள், சுற்றத்தார்களை விட்டு விட்டு அந்நியர்களிடம் நேசம் செய்கிறவர்களுக்குச் சமானம்.

ஆபத்திலே சுற்றத்தார்உதவுவார்களே தவிர, அந்நியர் உதவார். அப்படியே எந்தக் காலத்திலும் நமக்குத் தாய் மொழி உதவுமே அல்லாமல், அந்நிய மொழி உதவுமா? லத்தீனுக்கும், சமஸ்கிருதத்திற்கும் சொந்தக்காரர் இல்லை. அவை இறந்து போன மொழிகள். தமிழ் முதலியவை சீவிக்கிற மொழி. ஒருவர் கருத்தை ஒருவருக்கு வெளியிடுவதே பல மொழிகளைப் படிப்பதன் பயன் சமஸ்கிருதம், லத்தீன் படித்து யாரிடத்தில் பேசக் கூடும்? மேலும், அவை கடினமும் வருத்தமுமான மொழிகள் சீக்கிரத்தில் மறந்து